THE TIGER 2015 MOVIE TAMIL REVIEW

THE TIGER 2015 MOVIE TAMIL REVIEW

ALSO KNOWN AS : THE TIGER : AN OLD HUNTER’S TALE 
RELEASED DATE : 16 DECEMBER 2015 (SOUTH KOREA)
DIRECTOR : PARK HOON-JUNG
GENRES : ACTION , ADVENTURE
RUNNING TIME : 2H 19M
LANGUAGES : KOREAN , JAPANESE
2016 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான படம் தான் புலிமுருகன். இந்த படத்தை நாம் அனைவரும் VIJAY TV யில் பார்த்திருப்போம். அதேபோல் 2015 ஆண்டு வெளியான SOUTH KOREA புலிமுருகன் தான் THE TIGER : AN OLD HUNTER’S TALE படம். மலையாளத்தில் எந்த அளவு மோகன்லால் புலிமுருகன் படத்தை நடிப்பில் தாங்கி பிடித்தாரோ, அதே அளவு SOUTH KOREA படமான THE TIGER : AN OLD HUNTER’S TALE ஐ CHOI MIN-SIK தன் நடிப்பில் தாங்கி பிடித்திருக்கிறார்.
முக்கிய குறிப்பு : இப்படத்தில் எந்த ஒரு இடத்திலும் A CONTENT இல்லை. ஆகையால் குடும்பத்துடன் இப்படத்தை கண்டு மகிழலாம்.
இப்படம் கண்டிப்பாக நமக்கு இந்த உலகத்தில் யார் மிக கொடூரமான மிருகம் என உணரவைக்கும்..
THE TIGER 2015 MOVIE TAMIL REVIEW (சுருக்கமான விமர்சனம்) :
இப்படத்தின் கதையானது 1995 ஆம் ஆண்டு ஜப்பான், கொரியாவை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த காலகட்டத்தில் நடப்பதுபோல காட்டப்பட்டுள்ளது. அதுவும் MOUNT JIRISAN எனப்படும் ஓர் மலைபகுதியில் வாழும் புலிக்கும், ஜப்பானை சேர்ந்த GOVERNOR க்கும் நடக்கும் யுத்தம்தான் கதையின் மையக் கருவாகும். இதில் நாயகன் CHUN MAN-DUK வின் பங்கு என்ன என்பதை படத்தை பார்த்தால் மட்டுமே புரிந்துகொள்ள முடியும்.
விலங்குகளை வேட்டையாடுவதை தன் பொழுதுபோக்காக வைத்திருக்கும் ஜப்பான் GOVERNOR, MOUNT JIRISAN என்ற இடத்தின் மிக சிறந்த வேட்டைக்காரனாக வளம் வரும் நாயகன் CHUN MAN-DUK, MOUNT JIRISAN காட்டை ஆளும் கடவுளாக வாழும் மலைக்கடவுள் புலி, தன் உறவுகளை கொன்ற புலியை வேட்டையாட துடிக்கும் MOUNT JIRISAN னின் இரண்டாவது மிக சிறந்த வேட்டைக்காரன் GOO-GYEONG, தன் காதலியை மணக்க துடிக்கும் நாயகனின் மகனான SUK-YI என பலரின் கதையையும் ஒற்றை சனலாக கோர்த்து திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குனர் HOON-JUNG PARK.
ஒரு நல்ல படம் பார்க்க வேண்டும் என நீங்கள் நினைத்தால், கண்டிப்பாக THE TIGER : AN OLD HUNTER’S TALE 2015 MOVIE TAMIL REVIEW உங்களுக்கானது தான். மேலும் இப்படத்தை பற்றி தெரிந்துகொண்டு படம் பார்க்க விரும்பினால், கிழே உள்ள விரிவான விமர்சனம் உங்களை MOUNT JIRISAN மலைக்கு அன்புடன் வரவேற்கிறது..
STARWOODS RATING : 8.2/10
THE TIGER 2015 MOVIE TAMIL REVIEW (விரிவான விமர்சனம்) :
பல மலைகளின் தொடர்ச்சிதான் இந்த MOUNT JIRISAN மலை. இங்கு ஆட்சி புரியும் GOVERNOR, மிருகங்களை வேட்டையாடுவதை தன் பொழுதுபோக்காக வைத்திருப்பவர். அதனால் அவரது கண், ஒற்றை கண் கொண்ட MOUNTAIN LORD எனப்படும் புலியின் மீது விழுகிறது. அதற்கு முக்கிய காரணம், அப்புலியை வேட்டையாட செல்லும் அனைவரையும் புலி கொடூரமாக வேட்டையாடுவதனால் தான். அக்காட்டின் ராஜாவான அப்புலி 1000 கிலோ எடைக்கொண்ட ராட்சசனாக அக்காட்டில் வளம் வருகிறது. GOVERNOR ரின் ஆசையை நிறைவேற்ற அந்த ஏரியாவின் மிகசிறந்த வேட்டைகாரனான CHUN MAN-DUK யிடம் அந்த புலியை வேட்டையாட சொல்கிறான் MOUNT JIRISAN னின் படை தளபதி. ஆனால் CHUN MAN-DUK அதை ஏற்க மறுக்கிறான். அதற்கு காரணம் அந்த புலி அந்த காட்டின் கடவுளாக பார்க்கபடுவதே.
GOO-GYEONG என்ற வேட்டைக்காரன் அந்த புலியை வேட்டையாட ஜப்பான் படை தளபதிக்கு உதவுகிறான். அப்படி ஒருநாள் அந்த புலியை வேட்டையாட காட்டிற்கு செல்கின்றனர் GOO-GYEONG னின் குழு. அவர்கள் செல்லும் வழியில் ஒரு இடத்தில் புலியின் கால் தடம் தென்படுகிறது. அதனுடன் இரண்டு குட்டி புலிகளின் கால் தடங்களும் கிடைக்கிறது. அதை பார்த்த GOO-GYEONG, புலி தன் குட்டியுடன் இந்த இடத்தில் எங்கோதான் வசிக்கிறது என கூற, அவனது உதவியாளன் CHIL-GOO “இங்கு அருகில் உள்ள நீர் ஓடையில் தண்ணீர் குடிக்கத்தான் அது வந்திருக்கிறது” என கூறுகிறான். அதனால் மறுநாள் கண்டிப்பாக அங்கு புலி தன் குட்டிகளுடன் தண்ணீர் குடிக்க வரும் என அங்கு பொறி வைக்கின்றனர் GOO-GYEONG குழு. அதேபோல் தண்ணீர் குடிக்க வந்த புலி பொறியில் மாட்டிகொள்கிறது. அதை சுற்றி வளைக்கிறது GOO-GYEONG குழு. இரண்டு குட்டிகளை இரக்கமின்றி கொன்ற அவர்களை தாக்க முயல்கிறது தாய் புலி. ஆனால் பொறியின் பிடியில் மாட்டிய அந்த புலியால் அவர்களை ஒன்றும் செய்ய முடியவில்லை. அதை வெறுப்பேற்றிய GOO-GYEONG, கடைசியில் அந்த புலியை கொன்று ஜப்பானியர்களிடம் ஒப்படைக்க கட்டி தூக்கி செல்கிறான். அவர்களின் துப்பாக்கி சத்தத்தை வைத்து அவர்களை தேடி வருகிறான் நம் காட்டு ராஜா MOUNTAIN LORD.
ஆவேசமாக வரும் அந்த ஒற்றை கண் புலியிடம் மாட்டிக்கொள்ளாமல் GOO-GYEONG குழு அங்கிருந்து கிளம்பிவிடுகிறது. ஆனால் இந்த புலியை வேட்டையாடுவது தான் GOO-GYEONG வின் லட்சியம். வேட்டையாடிய புலியை வைத்து போட்டோ எடுத்துக்கொள்கின்றனர் ஜப்பானியர்கள். அதை பார்த்த கொரியர்கள் அதிர்ச்சியாகின்றனர்.
இந்த புலியைவிட GOVERNOR க்கு ராஜாவின் மீது தான் கண் என்பதால் MOUNT JIRISAN வருகிறார். அவருக்கு GOO-GYEONG அப்புலியை பிடித்து தருவதாக வாக்கு கொடுக்கிறான். அதனால் அந்த குட்டியில் ஒன்றை எடுத்துகொண்டு மறுபடியும் காட்டிற்கு செல்கிறான்.
அதேசமயம் நாயகன் CHUN MAN-DUK தான் வேட்டையாடுவதை பல வருடங்களுக்கு முன் விட்டதால், தற்போது காடுகளில் உள்ள மூலிகைகளை பறித்து நகரத்தில் உள்ள ஒரு கடையில் விற்று பணம் சம்பாதிக்கிறான். ஆனால் ஏதோ ஒரு காரணத்திற்காக அவன் நகரத்தை விட்டு மலையில் ஒரு இடத்தில் தனியாக தன் மகனுடன் வசித்து வருகிறான். CHUN MAN-DUK மகன் SUN-YI இந்த வாழ்க்கையை வெறுக்கிறான். ஆகையால் தன் அப்பாவை அந்த ராஜா புலியை வேட்டையாட சொல்கிறான். ஆனால் CHUN MAN-DUK அதை மறுக்கிறான். ஏனென்றால் அவன் அந்த புலியை கடவுளாக பார்க்கிறான்.
ஒற்றை குட்டியை தூக்கிக்கொண்டு காட்டிற்கு சென்ற GOO-GYEONG குழு, அக்குட்டியை பொறியாக வைத்து அந்த ஒற்றை கண் புலி MOUNTAIN LORD ஐ பிடிக்க வலைவிரிக்கிறான். அன்றிரவு அங்கு TENT போட்டு தங்கும் அவர்களில் ஒருவன், “GOO-GYEONG ஏன் இந்த புலியை வேட்டையாட இப்படி துடிக்கிறார்” என கேட்கிறான். அதற்கு CHIL-GOO “புலி GOO-GYEONG வின் குடும்பத்தை கொன்று, அவன் முகத்தில் மறைக்க முடியாத காயத்தை ஏற்படுத்தியதே காரணம்” என கூறியபடி இருக்க, GOO-GYEONG அனைவரையும் அமைதியாக இருக்க சொல்கிறான். திடீரென GOO-GYEONG “அது வந்துருச்சி” என அங்கிருந்து பொறி வைத்த இடத்தை நோக்கி ஓட தொடங்குகிறான். அவனை தொடர்ந்து குழுவில் உள்ள அனைவரும் ஓடுகின்றனர். பொறி வைத்த இடத்திற்கு சென்றால் அங்கு ஓநாய்கள் சில மாட்டிக்கொண்டு கத்தியவாறே இருக்கின்றன. அதேசமயம் எந்த பொறியிலும் மாட்டாமல் குட்டி புலியை ராஜா தூக்கி சென்றிருக்கிறது. அதை கவனித்த GOO-GYEONG “அது நரி மாதிரி யோசிக்கிறது” என கடுப்பாக கூறுகிறான்.
GOO-GYEONG குழு CHUN MAN-DUK ஐ தேடி வீட்டிற்கே வருகின்றனர். CHUN MAN-DUK தனியாக தன் வீட்டின் உள்ளே GOO-GYEONG மற்றும் CHIL-GOO விடம் பேசுகிறான். CHIL-GOO, CHUN MAN-DUK ஐ தங்களோடு வேட்டையாட வரும்படி அழைக்கிறான். ஆனால் CHUN MAN-DUK அவர்கள் அழைப்பை ஏற்க மறுக்கிறான். அதேசமயம் வெளியே காத்திருக்கும் குழு நபர்களிடம் SUN-YI அந்த புலியை வேட்டையாடினால் எவ்வளவு கிடைக்கும் என கேட்கிறான். அதற்கு குழுவில் உள்ள ஒருவன் “நகரத்தில் ஒரு பெரிய வீடு கட்டி, மீதி பணத்தை வைத்துக்கொண்டு நிம்மதியாக வாழலாம்” என கூறுகிறான். வீட்டின் உள்ளே தங்கள் அழைப்பை மறுத்த CHUN MAN-DUK விடம், GOO-GYEONG “எங்களுக்காக வேண்டாம், உன்னோட மனைவி இறப்பிற்கு அந்த புலியும் ஒரு காரணம் என்பதை மறந்துவிட்டாயா?? அதற்காக அந்த புலியை பழிவாங்க உனக்கு தோணவில்லையா??” என கேட்கிறான். அவனை அமைதியாக இருக்க சொல்கிறான் CHIL-GOO, ஆனால் GOO-GYEONG வின் கேள்விகளுக்கு பதில் அளிக்க விரும்பாத CHUN MAN-DUK அவர்ளை அங்கிருந்து கிளம்ப சொல்கிறான். அப்போது FLASH BACK வருகிறது. படத்தின் சுவாரசியம் கெடாமல் இருக்க, அந்த FLASH BACK ஐ கடந்து செல்கிறேன்.
கடைசியில் அந்த புலியை GOVERNOR வேட்டையாடி தன் வீட்டில் உள்ள SHOWCASE ல் வைத்தானா?? CHUN MAN-DUK ஏன் அந்த புலியை வேட்டையாட மறுக்கிறான்?? SUN-YI தான் வாழ நினைத்த வாழ்க்கையை வாழ்ந்தானா?? GOO-GYEONG குழு அந்த ஒற்றை கண் புலியை வேட்டையாடினானா?? கடைசியில் படம் பார்ப்பவர்களுக்கு மிருகம் யார் என தெரிய வருகிறதா?? என பல கேள்விகளுக்கு தவறாமல் விடை தருகிறார் இயக்குனர் HOON-JUNG PARK.
POSITIVE :
அட்டகாசமான GRAPICS, ஒரு இடத்தில் கூட புலியை நாம் GRAPICS என கண்டுபுடிக்க முடியாது.
ஒவ்வொருவரும் படத்தில் வாழ்ந்திருகிறார்கள். முக்கியமாக CHUN MAN-DUK வாக நடித்திருக்கும், CHOI MIN-SIK ன் நடிப்பு பாராட்டுக்குரியது.
அதேபோல் சற்றும் பொறுமை இழக்க செய்யாத திரைக்கதை, நம்மை கதையோடு கட்டிப்போடுகிறது.
படத்தில் வேலைப்புரிந்த அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் தங்கள் வேலையை சிறப்பாக செய்துள்ளனர் என்பது படத்தை பார்த்தால் புரியும்.
NEGATIVE :
படத்தை ரசித்து பார்த்தால், பெரிதாக குறைசொல்ல ஒன்றுமில்லை, ஆனால் சில காட்சிகள் நம்பகத்தன்மையாக இல்லை என்பதே உண்மை.
WRITTEN & DIRECTED BY HOON-JUNG PARK

CAST :

CHOI MIN-SIK AS CHUN MAN-DUK
MAN-SIK JEONG AS GOO-GYEONG
SEOK-WON JEONG AS MILITARY OFFICER RYU
JI-SO JUNG AS SUN-YI
HONG-PA KIM AS HERBAL SHOP OWNER
SANG-HO KIM AS CHIL-GOO
NA-RA LEE AS MAL-NYEON
REN OSUGI AS GOVERMENT OFFICIAL MAEZONO
MI-RAN RA AS CHIL-GOO’S WIFE
YOO-BIN SUNG AS SUK-YI
PRODUCED BY MIN-JUNG PARK
MUSIC BY YEONG-WOOK JO
CINEMATOGRAPHY BY MO-GAE LEE
ART DIRECTION BY HWA-SEONG JO
COSTUME DESIGN BY SANG-GYEONG JO
SOUND DEPARTMENT
BRANDON BAK , ROB NOKES
SPECIAL EFFECTS BY KA RYOON KIM

AWARD

21ST CHUNSA FILM ART AWARDS FOR BEST VISUAL EFFECTS – JO YONG-SUK – WON
36TH KOREA GOLD AWARDS FESTIVAL FOR BEST DIRECTOR – HOON-JUNG PARK – WON
36TH KOREA GOLD AWARDS FESTIVAL FOR BEST GRAND PRIZE – THE TIGER : AN OLD HUNTER’S TALE – WON
36TH KOREA GOLD AWARDS FESTIVAL FOR BEST SPECIAL JURY PRIZE – JUNG MAN-SIK – WON
53RD GRAND BELL AWARDS FOR BEST HIGH TECHNOLOGY SPECIAL AWARD – WON
JO YONG-SUK, HWANG HYO-KYUN, KWAK TAE-YONG, KIM TAE-EUI
GOLDEN CINEMATOGRAPHY AWARDS FOR BEST FILM – THE TIGER : AN OLD HUNTER’S TALE – WON
GOLDEN CINEMATOGRAPHY AWARDS FOR BEST DIRECTOR – HOON-JUNG PARK – WON

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *