THE HIDDEN FACE 2011 MOVIE TAMIL REVIEW

THE HIDDEN FACE 2011 MOVIE TAMIL REVIEW

ORIGINAL NAME : LA CARA OCULTA
RELEASED DATE : 16 SEPTEMBER 2011 (SPAIN)
DIRECTOR : ANDRES BIAZ
GENRES : MYSTERY , THRILLER
RUNNING TIME : 1H 43M
LANGUAGES : SPANISH
ஸ்பானிஷ் மொழியில் இருந்து மேலும் ஒரு வித்தியாசமான கதைகளம் கொண்ட MYSTERY , THRILLER படம். தவறாமல் பார்க்கவும்..
முக்கிய குறிப்பு : இப்படத்தின் கதைகளம் ஒரு கணவன் மனைவியை சுற்றிவருவதால் நிறைய A CONTENT இடம்பெற்றுள்ளது. ஆகையால் தவறி கூட இப்படத்தை குடும்பத்துடன் பார்த்துவிடாதீர்கள். அப்படி பார்த்து அசிங்கபட்டால் நாங்கள் பொறுப்பல்ல..
இப்படம் சற்று பேய் படம் போல் இருக்கும். அதனால் யாரும் பயந்து பார்க்காமல் இருக்க வேண்டாம். இப்படம் முழுக்க முழுக்க ஒரு MYSTERY , THRILLER படமே..

STARWOODSTAMIL RATING : 7.4

THE HIDDEN FACE 2011 MOVIE TAMIL REVIEW (சுருக்கமான விமர்சனம்) :
தன் காதலியை இழந்து வாடும் நாயகன் ADRIAN, தன் சோகத்தில் இருந்து மீள வழி தெரியாமல் பகல், இரவாக குடித்துக்கொண்டே இருக்கிறான். அப்படி ஒருநாள் இரவு அவன் குடிக்க ஒரு “பார்”க்கு செல்கிறான். அங்கு பணிபுரியும் FABIANA, ADRIAN க்கு குடிக்க சரக்கு கொடுக்கிறாள். அப்போது FABIANA, ADRIAN ஏதோ ஒரு சோகத்தில் இருப்பதை அறிந்து அவனுக்கு உதவ முன்வருகிறாள். அது நாளடைவில் காதலாக மாற தொடங்குகிறது. அப்படி காதலில் விழுந்து, ADRIAN வீடுவரை வந்த FABIANA க்கு பல மர்மமான சம்பவங்கள் அந்த வீட்டில் நிகழ்கிறது. அந்த மர்மங்கள் என்ன?? அவைகள் FABIANA வை எங்குகொண்டுபோய் விட போகின்றன என பல கேள்விகளுக்கு விடையளிகிறது இயக்குனர் ANDRES BIAZ ன் திரைக்கதை..
இப்படத்தின் ONE LINE சொன்னால் கூட, படத்தின் சுவாரசியம் குறைந்து போகும். ஆகையால் தான் இந்த மிக சுருக்கமான விமர்சனம். மேலும் THE HIDDEN FACE 2011 MOVIE யை பற்றி தெரிந்துகொள்ள கிழே உள்ள விரிவான விமர்சனத்தை படிக்கவும்..

THE HIDDEN FACE 2011 MOVIE TAMIL REVIEW (விரிவான விமர்சனம்) :

படத்தின் ஆரம்பத்திலேயே நாயகன் ADRIAN தன் வீட்டில் அவன் காதலி அவனுக்காக விட்டு சென்ற வீடியோ ஒன்றை பார்த்தபடி இருக்கிறான். அதில் BELEN கூறியது என்னவென்றால் “ஹாய் ADRI, இது ரொம்ப கஷ்டமான விஷயம், இத உன் முகத்தை பார்த்து என்னால் சொல்ல முடியாது, அதுமட்டுமல்ல தேவையில்லாத விவாதத்தை குறைக்கவே இந்த வீடியோ மூலம் இதை சொல்கிறேன். நான் உன்னைவிட்டு செல்கிறேன், என்னை தேடி எங்கும் அலைய வேண்டாம், அதேபோல் வெறுத்துவிடவும் வேண்டாம்.. I LOVE YOU”.. என சொல்கிறாள். இதை பார்த்த ADRIAN மிகுந்த கவலைக்கு ஆளாகிறான். வீட்டில் குடித்தபடி அழுகிறான். வீட்டில் சரக்கு தீர்ந்தவுடன், சரக்கடிக்க கொட்டும் மழையில் “பார்”க்கு செல்கிறான். அப்போது அங்கு அவனுக்கு SERVE செய்யும் FABIANA, ADRIAN ஏதோ சோகத்தில் இருப்பதை கண்டுக்கொள்கிறாள். “பார்” CLOSE ஆகும் நேரம்வரை அங்கு குடித்தபடியே இருக்கிறான் ADRIAN. பின் FABIANA “பார்” CLOSE ஆக போகிறது என ADRIAN னிடன் கூற, அவன் அங்கிருந்து எழுந்து செல்கிறான். “பார்” க்கு வெளியே போதையில் ஒருவனை இடித்த ADRIAN, அவனுடன் சண்டையிட தொடங்குகிறான். அப்போது வெளியே ஓடி வந்து அவனுக்கு உதவும் FABIANA, அவனை அன்றிரவு அவள் வீட்டிற்கு அழைத்து செல்கிறாள்.
அடுத்த நாள் FABIANA வீட்டில் கண்விழிக்கும் ADRIAN, இரவு நடந்த எதுவும் நினைவில்லாமல் தடுமாறுகிறான். பின் FABIANA அவனுக்கு இரவு நடந்ததை சொல்லி புரியவைக்க, எதுவும் கூறாமல் ADRIAN அங்கிருந்து வேகமாக கிளம்பி செல்கிறான்.
எந்த வேலையிலும் தன் கவனத்தை செலுத்த முடியாமல் தடுமாறுகிறான். பின் தனக்கு உதவிய FABIANA வை சந்திக்க மறுபடியும் அதே “பார்” க்கு வருகிறான் ADRIAN. ஆனால் அவனை பார்த்த FABIANA ஒன்றும் பேசாமல் நிற்க, அவன் காலையில் அப்படி நடந்துக்கொண்டதற்கு மன்னிப்பு கேட்கிறான். அதன்பின் அங்கிருந்து அவளை தான் பணிபுரியும் இடத்திற்கு அழைத்து வருகிறான். அங்கு சிலமணிநேரம் அவர்கள் பேச, அவளுக்கு முத்தமிட முயற்சிக்கிறான் ADRIAN. ஆனால் அவனை தடுத்த FABIANA “உனக்கு காதலி அல்லது மனைவி இருக்கிறார்களா??” என கேட்கிறாள். அவன் அதற்கு “இல்லை” என்ற ஒற்றை வார்த்தையை சொல்லி, அவள் கேள்விக்கு முற்றுபுள்ளியை தன் முத்தத்தின் மூலம் சொல்கிறான்.
அன்றிரவு அவள் வீட்டிற்கு FABIANA வை அழைத்து வருகிறான் ADRIAN. அங்கு இருவரும் செக்ஸ் வைத்துக்கொள்கின்றனர். பின் மறுநாள் அவனுக்கு முன்னதாக எழுந்த FABIANA, பல் துலக்க BATH ROOM செல்கிறாள். இங்கிருந்து ஆரம்பிக்கிறது பல மர்ம நிகழ்வுகள். ஆம், நம்மூர் காஞ்சனா படத்தில் SINK ல் இருந்து முடி வருவதுபோல, பல் துலக்கியபடி BATH ROOM SINK அருகில் நிற்கும் FABIANA க்கு SINK ல் இருந்து ஏதோ சத்தம் கேட்க தொடங்குகிறது. என்ன சத்தம் என கேட்க, காதை SINK அருகில் கொண்டு செல்கிறாள். அப்போது சத்தம் நின்றுவிடுகிறது.
ADRIAN வீட்டை முழுவதும் சுற்றிபார்க்க தொடங்குகிறாள் FABIANA. அப்போது ஒரு அறையில் ADRIAN னின் நாய் HANS படுத்திருக்கிறது. பின் அந்த வீட்டின் ஒரு இடத்தில் உள்ள TABLE லில் வரைந்த படங்கள் சில இருக்கிறது. அதை அவள் உற்று நோக்கும் சமயத்தில், அங்கு வந்த ADRIAN “இங்க எவ்வளவு நேரமா இருக்க” என கேட்கிறான். அதற்கு FABIANA “இப்பதான் வந்தேன்” என கூற, அவளை அங்கிருந்து அழைத்து செல்கிறான். பின் அவன் வீட்டு கதவை போலீஸ் தட்ட, அவன் திறக்கிறான். போலீஸ் “உங்க காதலி இந்த நாட்டை விட்டு சென்றிருக்க வாய்ப்பே இல்லை, ஏனென்றால் அவர்கள் பெயரில் எந்த விமானத்திலும் டிக்கெட் புக் செய்யப்படவில்லை” என கூறியபடி இருக்கும் சமயத்தில், அங்கு FABIANA வருகிறாள். அவளை பார்த்த போலீஸ், காதலி காணாமல் போய் சில நாட்கள் கூட ஆகவில்லை, அதற்குள் ADRIAN வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருக்கிறான் என தெரிந்து அவன் மீது சந்தேகம் கொள்கின்றனர்.
அவன் வீட்டிற்கு வந்த போலீஸ் அவன் வீட்டை பார்வையிட வேண்டும் என கூறி, முழுவதும் சுற்றி பார்க்கின்றனர். ஆனால் அங்கு ADRIAN க்கு எதிராக எந்த தடயமும் கிடைக்கவில்லை.
போலீஸ் சென்ற பிறகு ADRIAN தன் வீட்டில் இருந்து கிளம்புகிறான். அவன் சென்ற பிறகு BATH ROOM ல் உள்ள BATHTUB ல் படுத்திருக்கிறாள் FABIANA. அந்த அமைதியான சூழலில் BATHTUB ல் உள்ள தண்ணீரில் அவள் கால் பகுதியில் இருந்து மெல்லிய அலைகள் அவளை நோக்கி வருகின்றன. அதை கவனித்த FABIANA, BATHTUB மேலே உள்ள SHOWER ல் இருந்து தண்ணீர் சொட்டுகிறதா?? என பார்க்கிறாள். ஆனால் SHOWER ல் இருந்து எந்த தண்ணீரும் சொட்டவில்லை. ஆனால் அந்த மெல்லிய அலைகள் தொடர்து அவளை நோக்கி வந்த படி இருக்க, அவள் பயந்து BATHROOM ஐ விட்டு வெளியே செல்கிறாள்.
அதேபோல் ஒருநாள் போலீஸ் ADRIAN க்கு CALL செய்து “ஒரு சடலம் கிடைத்திருகிறது, அது BELEN ஆ என வந்து அடையாளம் காட்டுங்கள்” என கூறுகின்றனர். சோகமாக ADRIAN கிளம்பி செல்கிறான். இரவு BATHROOM ல் FABIANA குளித்துக்கொண்டு இருக்கையில், SHOWER ல் இருந்து HOT WATER தானாக வர, அவள் அதிர்ச்சியில் அலறுகிறாள். பின் SHOWER ஐ CHECK செய்து, குளிக்க தொடங்குகிறாள். மறுபடியும் HOT WATER தானாக SHOWER ல் வர, தற்போது காயமடைகிறாள். அந்த சமயம் கண்ணாடியில் அவள் காயத்தை பார்க்க முயல, CURRENT CUT ஆகிறது. பதற்றத்தில் என்ன செய்வது என தெரியாமல், BATHROOM ல் இருந்து வெளியே வந்த அவள் கையில் ஒரு கம்பியை எடுத்துக்கொண்டு கீழே வருகிறாள். அந்த சமயம் HANS அவளை பார்த்து குறைக்க, பயத்தில் தடுமாறி PIONO வில் மோதி மயக்கமடைகிறாள்.
ADRIAN வந்து அவளை காப்பாற்றி மருந்து கொடுக்கிறான். அப்போது அவனிடம் BATHROOM ல் உள்ள SINK ல் இருந்து ஏதோ சத்தம் வருகிறது. இந்த வீட்டில் பேய் இருக்கிறது என சொல்கிறாள். ADRIAN அதை ஏற்க மறுக்கிறான். ஆனால் அந்த வீட்டில் நடக்கும் அனைத்து மர்மமான நகழ்வுகளும் FABIANA க்கு மட்டுமே நிகழ்கிறது. அதற்கு காரணம் என்ன?? அந்த மர்ம நிகழ்வுகள் FABIANA வை என்ன செய்ய போகிறது?? ADRIAN காதலி BELEN என்ன ஆனால்?? ADRIAN தான் அவளை கொலை செய்தானா?? போலீஸ் இதை கண்டுபிடித்தா?? என பல கேள்விகளுக்கு பொறுமையாக பதிலளிக்கிறார் இயக்குனர் ANDRES BIAZ..
சுவாரசியமான தகவல்கள் :
2.6 மில்லியன் டாலரில் எடுக்கப்பட்ட இப்படம் 5.2 மில்லியன் டாலர் வசூல் செய்து மாபெரும்வெற்றி அடைந்திருக்கிறது.
இப்படம் 15 கோடி செலவில் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டது. ஆனால் எதிர்ப்பார்த்த அளவு ஹிட் ஆகவில்லை, ஆனாலும் 27 கோடி வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் PERDIDA என்ற பெயரில் MEXICO-விழும் ரீமேக் செய்யப்பட்டது.

 

CAST

QUIM GUTIERREZ AS ADRIAN
MARTINA GARCIA AS FABIANA
CLARA LAGO AS BELEN
MARIA SOLEDAD RODRIGUEZ AS MESERA
JOSE LUIS GARCIA AS NOVIO PELEA
MARCELA MAR AS VERONICA
HUMBERTO DORADO AS TITO
JULIO PACHON AS BUITRAGO
JUAN ALFONSO BAPTISTA AS RAMIREZ
MARCELA BENJAMEA AS FORENSE
ALEXANDRA STEWART AS EMMA
MOZAD AS PERRO ‘HANS’
WRITING CREDITS
ANDRES BAIZ (SCREENPLAY)
ARTURO INFANTE (STORY)
HATEM KHRAICHE (STORY – WRITING)
PRODUCED BY ANDRES CALDERON , CRISTIAN CONTI
MUSIC BY FEDERICO JUSID
CINEMATOGRAPHY BY JOSEP M. CIVIT
FILM EDITING BY ROBERTO OTERO
PRODUCTION DESIGN BY BERNARDO TRUJILLO
ART DIRECTION BY DIANA TRUJILLO
COSTUME DESIGN BY TULIA DIAZ , ANA MARIA URREA
AWARDS :
PREMIOS MACONDO AWARD FOR BEST SUPPORTING ACTRESS – CLARA LAGO – WINNER
PREMIOS MACONDO AWARD FOR BEST SOUND – WINNER
EDUARDO CASTRO (SOUND DESIGNER)
CESAR SALAZAR (SOUND MIXER)
PREMIOS MACONDO AWARD FOR BEST FILM – ANDRES BIAZ – NOMINATED
PREMIOS MACONDO AWARD FOR BEST DIRECTOR – ANDRES BIAZ – NOMINATED
PREMIOS MACONDO AWARD FOR BEST ACTRESS – MARTINA GARCIA – NOMINATED
PREMIOS MACONDO AWARD FOR BEST SCREENPLAY – NOMINATED
ANDRES BIAZ & HATEM KHRAICHE
PREMIOS MACONDO AWARD FOR BEST EDITING – ROBERTO OTERO – NOMINATED
PREMIOS MACONDO AWARD FOR BEST MAKE-UP – OLGA TURRINI BERNARDONI – NOMINATED
PREMIOS MACONDO AWARD FOR BEST ORIGINAL SCORE – FEDERICO JUSID – NOMINATED

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Follow us on Facebook Follow us on Twitter Subscribe us on Youtube