K.V. ஆனந்த் பற்றிய 10 உண்மைகள் / kv anand 10 facts

K.V. ஆனந்த் பற்றிய 10 உண்மைகள் / kv anand 10 facts

கே.வி. ஆனந்த் வாழ்க்கையில் நடந்த சுவாரசியமான நிகழ்வுகளை நாம் இங்கே 10 உண்மைகளாக பார்க்கலாம். KV Anand 10 facts.

  1. சொந்த ஊர் சென்னை

சென்னையை பூர்வீகமாக கொண்ட கே. வி. ஆனந்த் பிறந்த தேதி அக்டோபர் 30, 1966.

  1. முதுகலை பட்டம்

இயற்பியலில் இளங்கலை பட்டம் அரும்பாக்கம் வைஷ்ணவ் கல்லூரியிலும், முதுகலை பட்டமாக விஷுவல் கம்யூனிகேசன் லயோலா கல்லூரியிலும் படித்துள்ளார்.

படிக்கும் பொழுது இமயமலைக்கு ட்ரெக்கிங் சென்றுள்ளார். தமிழ்நாட்டிலிருந்து இமயமலை வரை பல இடங்களை பார்த்தவருக்கு போட்டோகிராபி மீது ஆர்வம் வந்துள்ளது.

உடனே கேமராவை கையில் எடுத்தவர் state and national level photography contest-யில் கலந்துக்கொண்டு பல பதக்கங்களையும் வாங்கியுள்ளார்.

  1. Photo Journalist ஆக 4 வருடம்

Freelance photo journalist ஆக கல்கி, இந்தியா டுடே போன்ற செய்திதாள்கள் மற்றும் வார இதழ்களில் வேலை பார்த்துள்ளார்.

  1. ஒளிப்பதிவாளர் கனவு

4 வருடம் வேலைக்கு பிறகு ஒளிப்பதிவாளர் ஆகும் கனவோடு பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராமை சந்திந்து அவரிடம் உதவியாளராக சேர விருப்பம் தெரிவித்துள்ளார். கே.வி.ஆனந்தை ஆறாவது உதவியாளராக பி.சி. ஸ்ரீராம் சேர்த்துக்கொண்டுள்ளார்.

  1. உதவி ஒளிப்பதிவாளர்

கோபுர வாசலிலே, அமரன், மீரா, தேவர் மகன், திருடா திருடா போன்ற படங்களில் உதவியாளராக பி.சி. ஸ்ரீராமிடம் வேலை பார்த்திருக்கிறார்.

  1. ஒளிப்பதிவாளராக முதல் படம்

இயக்குனர் பிரியதர்ஷன் தனது அடுத்த படத்தின் ஒளிப்பதிவிற்காக பி.சி. ஸ்ரீராமை அணுகியுள்ளார். அந்த சமயத்தில் பி.சி ரொம்ப பிசியாக இருந்ததால், கே.வி.ஆனந்தை அந்த படத்திற்காக recommend செய்துள்ளார்.

அந்த வாய்ப்பின் மூலமாக 1994 வது வருடம் தேன்மாவின் கொம்பத் என்ற படத்தில் கே.வி.ஆனந்த் ஒளிப்பதிவாளராக அறிமுகம் ஆகிறார். அறிமுக படத்திலேயே இந்திய திரை நட்சத்திரங்கள் அனைவரையும் திரும்பி பார்க்க வைக்கிறார்.

National film award for best cinematography என்ற தேசிய விருதை தனது முதல் படத்திற்காக தட்டி வந்திருக்கின்றார்.

  1. தமிழில் முதல் படம்

1996 வது வருடம் தமிழில் முதல் படத்தை ஒளிப்பதிவு செய்கின்றார். அந்த படம் கதிர் இயக்கத்தில் வினீத், அப்பாஸ், தபு நடிப்பிலும் ரகுமான் இசையிலும் வெளிவந்த காதல் தேசம்.

  1. 15 படங்கள்

கே.வி.ஆனந்த் 15 படங்கள் ஒளிப்பதிவு செய்துள்ளார். அதில் 3 மலையாள படங்களும், 1 தெலுங்கு படமும், 5 ஹிந்தி படங்களும், காதல் தேசம், நேருக்கு நேர், முதல்வன், விரும்புகிறேன், செல்லமே, சிவாஜி என 6 தமிழ் படங்கள்.

  1. இயக்குனர் அவதாரம்

2005 வது வருடம் இயக்குனராக அவதாரம் எடுத்த கே.வி.ஆனந்த் அவர்கள், ஸ்ரீகாந்த், பிரித்திவிராஜ், கோபிகா நடிப்பில் கனா கண்டேன் என்கிற படத்தை இயக்கினார். படம் நல்ல விமர்சனங்களோடு மதிக்கதக்க வெற்றியும் பெற்றது.

  1. இயக்குனராக 7 படங்கள்

கனா கண்டேன், அயன், கோ, மாற்றான், அனேகன், கவண், காப்பான் என 7 படங்களை இயக்கியுள்ளார். இதில் அயன், கோ, அனேகன், கவண் போன்ற படங்கள் அந்தந்த வருடம் வசூல் சாதனை புரிந்த படங்கள்.

 

தான் ஒளிப்பதிவு செய்த, இயக்கிய படங்கள் மூலமாக ஒளிப்பதிவாளர், இயக்குனர் கே.வி.ஆனந்த் நம் மனதில் என்றென்றும் வாழ்ந்துக்கொண்டே இருப்பார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *