THE WAILING 2016 MOVIE TAMIL REVIEW | DON’T MISS THIS

THE WAILING 2016 MOVIE TAMIL REVIEW

INITIAL RELEASE DATE : 12 MAY 2016  
DIRECTOR : NA HONG JIN
GENRES : THRILLER , HORROR
RUNNING TIME : 2H 36M
LANGUAGES : KOREAN , JAPANESE , ENGLISH
AVAILABLE ON : AMAZON PRIME VIDEOS
கொரியன் படம் என்றாலே அதில் சில திருப்பங்கள் நம்மை பெரிதும் ஈர்க்கும். அப்படி இந்த HORROR , THRILLER படத்தில், CRIME சேர்த்து நல்ல ஒரு SUSPENCE , THRILLER படமாக நமக்கு கொடுத்திருக்கிறார்கள். பேய் படங்களை விரும்பி பார்ப்பவர்களும் சரி, CRIME படங்களை விரும்பி பார்ப்பவர்களும் சரி, இப்படம் கண்டிப்பாக அவர்களை ஏமாற்றாது.

STARWOODSTAMIL RATING : 7.0

முக்கிய குறிப்பு : இப்படத்தில் பெரிதாக எந்த ஒரு A CONTENT காட்சிகளும் இடம்பிடிக்கவில்லை, இருந்தாலும் இப்படம் இடம்பெற்றுள்ள சில காட்சிகள்  குடும்பங்களுடன் கண்டுகழிக்க கூடியதா என்பது சந்தேகத்துக்கூரியதே.. ஆகையால் தாங்களே ஒருமுறை இப்படத்தை பார்த்து முடிவு செய்துக்கொள்ளவும்.
STEEL RAIN மற்றும் THE ATTORNEY போன்ற படங்களில் நடித்த KWAK DO WON தான் இப்படத்தின் நாயகனாக நடித்துள்ளார்.
இப்படம் பேய்ப்படம் போல் இருந்தாலும், பேய்கள் பெரும்பாலும் காட்சிகளில் இடம்பெறவில்லை. மாறாக சில காட்சிகள் பயமுறுத்த வாய்ப்புள்ளது.
THE WAILING 2016 MOVIE TAMIL REVIEW (சுருக்கமான விமர்சனம்) :
இப்படத்தின் நாயகனான JONG GOO ஒரு போலீஸ், ஆனால் அவர் பயந்த சுபாவம் கொண்டவர். அவர் ஊரில் கொடூரமாக கொலைகள் நடக்கின்றன, அதை விசாரிக்கும் பொறுப்பு JONG GOO விடம் வருகிறது. அதேசமயம் அந்த கொலைகளில் உள்ள மர்ம கதைகள் JONG GOO க்கு பீதியை உருவாக்குகிறது. இந்த கொடூரமான கொலைகள் செய்வது யார்?? பயந்த சுபாவம் கொண்ட JONG GOO எப்படி இந்த வழக்கை கையாள போகிறார்?? இந்த கதைக்கும் பேய்களுக்கும் உள்ள தொடர்பு என்ன?? உண்மையில் இது பேய் கதைதானா?? இல்லை, வேறு கதையா?? என பல கேள்விகளுக்கு தன் துள்ளியமான திரைக்கதையில், தன் பதிலை விவரிக்கிறார் இயக்குனர் NA HONG JIN.
மேலும் படத்தை பற்றி தெரிந்துகொள்ள கீழே உள்ள விரிவான விமர்சனம் மற்றும் படம் சார்ந்த தகவல்களை படித்து தெரிந்துகொள்ளவும்.
THE WAILING 2016 MOVIE TAMIL REVIEW (விரிவான விமர்சனம்) :
முதல் காட்சியிலேயே ஒரு கொலை நடந்த இடத்திற்கு தன் வீட்டில் இருந்து வேக வேகமாக கிளம்பியபடி இருக்கிறார் JONG. பின் சம்பவ இடத்திற்கு சென்ற JONG, அங்கு என்ன சூழ்நிலை என்பதை சுற்றி பார்க்கிறார். ஒருவன் இரத்தம் வழிந்த முகத்துடன் வீட்டின் வெளியே அமர்ந்திருக்க, வீட்டில் உள்ள அனைவரும் இரத்தமயமாக இறந்த நிலையில் காட்சியளிக்கின்றனர்.
யார் இந்த கொலையை செய்திருப்பார்கள் என்ற சந்தேகம் ஒருபுறம் இருக்க, JONG GOO தன் நண்பருடன் அன்றிரவு ஸ்டேஷனில் இந்த கொலையை பற்றி பேசியபடி இருக்கிறான். வெளியே மழை வெளுத்து வாங்கியபடி இருக்கிறது. அவர்களுக்கு இடையில் ஒரு ஜப்பான்காரனை பற்றிய விவாதம் நடந்தபடி இருக்கிறது. அந்த சமயம் “கரென்ட்” கட் ஆக, கண்ணாடிக்கு வெளியே ஒரு பெண் நிற்பது, மின்னல் வெளிச்சத்தில் தெரிகிறது. அதை பார்த்து இருவரும் பயந்து போகின்றனர்.
அடுத்த நாளே ஒரு குடும்பம் கொலை செய்யப்படுகிறது. சம்பவ இடத்தில் JONG GOO ஜப்பான்காரனை பார்க்கிறான். அந்த ஜப்பான்காரன் GOO வை பார்த்தபடியே நிற்க, GOO பயந்து போகிறான். பின் மறுநாள் கொலை நடந்த வீட்டிற்கு வெளியே GOO மற்றும் அவன் நண்பன் காவல் பார்த்தபடி இருக்கின்றனர். அப்போது அங்கு மனநலம் பாதித்ததுபோல் ஒரு பெண் இருக்கிறாள். அவள் நடந்த சம்பவத்தை GOO விடம் விளக்கி சொல்கிறாள்.
அதை தொடர்ந்து பலர் ஜப்பான்காரனை பற்றி பேச தொடங்க, GOO மற்றும் அவன் நண்பன், ஜப்பன்காரனை தேடி காட்டுக்குள் செல்கின்றனர். அங்கு பல உண்மைகள் இருவருக்கும் தெரிய வர, GOO ஜப்பான்காரனிடம் அந்த இடத்தை காலி செய்ய சொல்லி கட்டளையிடுகிறான். ஆனால் அந்த ஜப்பான்காரன் GOO வின் கட்டளையை மதிக்கவில்லை.
ஆனால் இந்த இறப்பு அங்கு பரவிவரும் ஒரு மர்ம நோயால் தான் நிகழ்கிறது என சிலர் நம்புகின்றனர். கடைசியில் அங்குமிங்கும் பரவிய நோய் GOO வின் மகளுக்கு வர, GOO தன் மகளை எப்படி காப்பாற்ற போகிறான்?? அந்த ஜப்பான்காரன் யார்?? உண்மையில் பேய் இருக்கிறதா?? இல்லை மர்மநோய் தான் அனைத்துக்கும் காரணமா?? GOO விடம் நடந்த நிகழ்வை விளக்கி சொன்ன பெண் யார்?? என பல கேள்விகளுக்கு பலமான தன் திரைக்கதையால் பதில் சொல்கிறார் இயக்குனர் NA HONG JIN.
CRIME, MYSTERY, THRILLER, HORROR என அனைத்தும் கலந்த ஒருபடத்தை பார்க்க நீங்கள் நினைத்தால், இப்படம் கண்டிப்பாக உங்களை ஏமாற்றாது.
POSITIVE :
யூகிக்க முடியாத திரைக்கதை.
பரபரப்பான கடைசி ½ மணி நேரம்.
KWAK DO WON மற்றும் KIM HWAN HEE யின் நேர்த்தியான நடிப்பு.
NEGATIVE :
பேய்ப்படங்களில் பெரிதாக LOGIC இல்லாமல் இருப்பது வழக்கம்தான், அதை இப்படத்திலும் சில காட்சிகளில் உணரலாம்.
WAILING படம் சார்ந்த தகவல்கள் :
8 மில்லியன் டாலரில் உருவான இப்படம், 50 மில்லியனுக்கு மேல் வசூல் செய்துள்ளது.
இப்படம் பல விருதுகளை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
WRITTEN AND DIRECTED BY NA HONG JIN
CAST :
DO WON KWAK AS JONG GOO
JUN KUNIMURA AS JAPANESE MAN
HWANG JUNG MIN AS IL GWANG
WOO HEE CHUN AS THE MYSTERIOUS WOMEN
HWAN HEE KIM AS HYO JIN
JIN HEO AS MOTHER IN LAW
JANG SO YEON AS WIFE
ORPHAN 2009 MOVIE TAMIL REVIEW
ORPHAN 2009 MOVIE TAMIL REVIEW
MUSIC BY DALPALAN , YOUNG GYU JANG
CINEMATOGRAPHY BY KYUNG PYO HONG
FILM EDITING BY SUN MIN KIM.

DEAD SILENCE 2007 MOVIE TAMIL REVIEWDEAD SILENCE 2007 MOVIE TAMIL REVIEW

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Follow us on Facebook Follow us on Twitter Subscribe us on Youtube