NOCTURNAL ANIMALS 2016 MOVIE TAMIL REVIEW

NOCTURNAL ANIMALS 2016 MOVIE TAMIL REVIEW

INITIAL RELEASE DATE : 14 OCT 2016 (UNITED KINGDOM)
DIRECTOR : TOM FORD
GENRES : THRILLER , DRAMA
RUNNING TIME : 1H 57M
LANGUAGES : ENGLISH
AVAILABLE ON : – – –
பல தமிழ் படங்களில் கதைகள் மொக்கையாக இருந்தாலும், திரைக்கதை அந்த படத்தின் மீதுள்ள மதிப்பையே மாற்றிவிடும், அப்படி NOCTURNAL ANIMALS படத்தின் கதை பெரிதாக சொல்லும் அளவு இல்லை என்றாலும், திரைக்கதை நம்மை படத்தின் இறுதி காட்சிவரை கட்டிப்போடுகிறது என்பதே உண்மை..
இப்படி இந்த படத்தை விமர்சனம் செய்வதற்கான காரணத்தை நீங்கள் கீழ் வரும் சுருக்கமான மற்றும் விரிவான விமர்சனங்களை படிக்கும்போது உள்ள வேறுபாட்டின் மூலம் புரிந்துக்கொள்வீர்கள்..

STARWOODSTAMIL RATING : 6.5

முக்கிய குறிப்பு : இப்படத்தில் அதிகமான A CONTENT காட்சிகள் இடம்பிடித்துள்ளதால், குடும்பத்துடன் பார்க்க இயலாது.

NOCTURNAL ANIMALS 2016 MOVIE TAMIL REVIEW (சுருக்கமான விமர்சனம்) :

இப்படத்தின் முதல் காட்சியில் கதாநாயகிக்கு அவள் முன்னாள் கணவரிடம் இருந்து ஒரு “பார்சல்” வருகிறது. அந்த பார்சலில் அவன் எழுதிய ஒரு நாவல் மற்றும் அதனுடன் ஒரு கடிதமும் இருக்கிறது. அந்த கடிதத்தில் “நான் எழுதிய நாவலின் முதல் பதிப்பை உனக்கு அனுப்பி உள்ளேன், நீதான் இந்த நாவலை முதன்முதலில் படிக்க போகிறாய், உனது விமர்சனத்தை தெரிந்துகொள்ள ஆவலாக உள்ளேன்” என குறிப்பிடப்பட்டுள்ளது. அதே சமயத்தில் அவளது இரண்டாவது கணவனுக்கும் அவளுக்கும் இடையில் சரியான புரிதல் இல்லாத சமயம் அது. மிகுந்த மன அழுத்தத்தில் இருக்கும் அவளுக்கு இந்த நாவல் தர இருப்பது என்ன?? எதனால் அவள் முதல் கணவனை விவாகரத்து செய்தால்?? தன் இரண்டாவது கணவனுக்கும் அவளுக்கும் உள்ள பிரச்சனை என்ன?? அந்த நாவலின் கதை என்ன?? என ஒரு மெல்லிய கதையை, தன் திரைக்கதையின் மூலம் விறுவிறுப்பாக்கியிருக்கிறார் இயக்குனர் TOM FORD.
இப்படத்தை பற்றி மேலும் தெரிந்துகொள்ள, கீழே உள்ள விரிவான விமர்சனம் மற்றும் படம் சார்ந்த தகவலை படிக்கவும்..

NOCTURNAL ANIMALS 2016 MOVIE TAMIL REVIEW (விரிவான விமர்சனம்) :

தன் முதல் கணவனிடம் (EDWARD SHEFFIELD) இருந்து வந்த நாவலை படிக்க தொடங்கும் முன் நாயகி SUSAN MORROW, தன் இரண்டாவது கணவனான HUTTEN னுடன் வார இறுதியில் நேரம் செலவிட நினைக்கிறாள். ஆனால் HUTTEN தனக்கு NEW YORK ல் ஒரு MEETING இருப்பதாக சொல்லிவிடுகிறான். அதேசமயம் அன்றிரவு ஒரு பார்ட்டிக்கு இருவரும் செல்கின்றனர். அங்கு உள்ள ஒரு பெண் SUSAN னிடம் அவள் வாழ்க்கையை பற்றி கேட்கிறாள். ஆனால் SUSAN வருத்தமாக அதற்கு பதில் சொல்வதை பார்த்த அவள் “என்னோட கணவன் ஒரு பொண்ணோட தொடர்பில் இருக்கிறான், ஆனால் அதை நான் கண்டுக்கொள்ளாததால், நான் அவன் பணத்தையும், அவன் செல்வாக்கையும் பயன்படுத்த முடிக்கிறது. அதேபோல் HUTTEN எந்த தவறு செய்தாலும் கண்டுகொள்ளாமல் இருக்கும்வரை நீயும் பணக்காரியாக இருக்க முடியும்” என சொல்கிறாள்.
அந்த பெண்ணின் கணவன் SUSAN னிடம் பேசும்போது “நான் ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பது என் மனைவிக்கு தெரியும், ஆனால் அவள் என் பணத்திற்காக அதை கண்டுகொள்ளவில்லை. அவளிடம் அழகு உள்ளவரை, அவளை விட்டு நான் பிரியமாட்டேன். ஆனால் அவள் தோள் சுருங்கும் நாள் வந்தால், அவளை விவாகரத்து செய்து, வேறு ஒரு பெண்ணை மணப்பெண்” என சொல்கிறான். இந்த வார்த்தைகள் அவளுக்கு மேலும் மன உளைச்சலை தருகிறது.
இந்த கவலைகளோடு தன் வீட்டுக்கு திரும்பும் SUSAN, EDWARD யின் நாவலை பார்க்கிறாள். ஆனால் அதை படிக்கவில்லை, இரவு தூக்கம் வராமல் தவிக்கும் அவள் வேறு வழியின்றி அந்த நாவலை படிக்க தொடங்குகிறாள்.
அவள் படிக்கும் நாவலின் பெயர் NOCTURNAL ANIMALS. நாவலின் தொடக்கத்தில் TONY தன் மனைவியான SUSAN மற்றும் மகளான INDIA வுடன் ஒரு நெடுஞ்சாலையில் காரில் செல்கிறான். இரவு பயணிக்கும் அவர்கள், அமைதியான சூழலில் நிம்மதியாக பயணிக்கின்றனர். ஆனால் ஒரு இடத்தில் அவர்களுக்கு முன்னாள் இரண்டு கார்கள் பாதையை அடைத்தவாறு பயணிக்கின்றன. TONY க்கு சிறிதும் இடைவெளி விடாமல் பயணிக்கின்றனர் முன்னாள் செல்பவர்கள்.
அவர்களை கடக்க HORN அடிக்கிறான் TONY. அப்போது முன்னாள் செல்லும் காரில் ஒரு கார் வேகமெடுத்து வழி விடுகிறது. அந்த காரை வேகமாக கடக்கிறான் TONY. ஆனால் முன்னாள் செல்பவர்கள் போதையில் இருக்கின்றனர். அவர்களை கடந்தபின் அவர்களை நோக்கி INDIA, F**K என தனது விரல்களை காட்டுகிறாள். அதை பார்த்த அவர்கள் TONY யின் காரை நோக்கி வேகமாக வருகின்றனர். அதை பார்த்த INDIA பதற்றமடைகிறாள். ஆனால் TONY அந்த சூழலை தன் கட்டுபாட்டுக்குள் கொண்டுவர முயன்றும் பயனில்லை, ஆமாம் அவர்கள் TONY யின் காரை இடிக்க தொடங்குகின்றனர். ஒருகட்டத்தில் TONY யின் காரை முட்டி ரோட்டின் ஓரமாக தள்ளிவிடுகின்றனர்.
அந்த காரில் இருந்து இறங்கிய ஒருவன் (RAY) TONY காரை நோக்கி நடந்து வருகிறான். SUSAN மற்றும் INDIA பதற்றத்தின் உச்சிக்கு செல்ல, RAY விடம் TONY தயங்கி பேசுகிறான். TONY ஐ RAY கீழே இறங்க சொல்கிறான். ஆனால் SUSAN மற்றும் INDIA இறங்க வேண்டாம் என TONY யிடம் சொல்கின்றனர்.
INDIA விடம் TONY போலீஸ்க்கு கால் பண்ண சொல்கிறான். ஆனால் RAY “இங்கிருந்து யாருக்கும் போன் பண்ண முடியாது, ஏன்னா இங்கு சிக்னல் கிடைக்காது” என சொல்கிறான். TONY காரை எடுக்க முயன்றால், TONY யிடம் RAY “உங்கள் கார் டயர் பஞ்சர் ஆகிவிட்டது” என சொல்கிறான். ஆனால் அதை மூவரும் நம்ப தயங்குகின்றனர். அதை புரிந்துகொண்ட RAY “நம்பவில்லை என்றால் காரை ஸ்டார்ட் செய்து கிளம்புங்கள்” என சொல்கிறான். உடனே TONY காரை ஸ்டார்ட் செய்து கிளம்ப, கார் நகர திணறுகிறது. தன் சூழலை உணர்ந்த TONY பதற்றமடைகிறான்.
RAY அவர்களுக்கு உதவுவதாக சொல்கிறான். தன் நண்பர்களை வரும்படி சொல்லி, TONY யிடம் ஸ்டெப்னி டயரை எடுத்து தரும்படி சொல்கிறான். SUSAN மற்றும் INDIA வை TONY காரில் அமரும்படி சொல்லிவிட்டு கீழே இறங்கி, அவர்களுக்கு உதவுகிறான். ஆனால் RAY “உன் மனைவி மற்றும் மகளை இறங்க சொல், இல்லையென்றால் டயரை மாற்ற இயலாது” என சொல்ல, தயக்கத்தோடு இருவரும் இறங்குகின்றனர்.
அந்த சமயம் அங்கு வேகமாக காரில் வரும் போலீஸிடம் உதவி கேட்கிறான் TONY. ஆனால் அந்த போலீஸ் கார் நிக்காமல் வேகமாக சென்றுவிடுகிறது. அதை பார்த்த TONY வெறுப்படைகிறான். பயந்த சுபாவம்கொண்ட TONY ஐ அடிக்க தொடங்குகின்றனர் RAY மற்றும் நண்பர்கள். அதுமட்டுமில்லாமல் INDIA விடம் தவறாக நடக்க முயற்சி செய்கின்றனர். பின் டயரை மாற்றிய RAY மற்றும் நண்பர்கள், SUSAN மற்றும் INDIA வை கடத்தி செல்கின்றனர். அவர்களை தடுக்க முடியாமல் தவிக்கிறான் TONY. இப்படிபட்ட சூழல் SUSAN னை பதற்றமடைய செய்ய, நாவல் படிப்பதை நிறுத்துகிறாள்.
தனிமையில் தனக்கு பாதுகாப்பு இல்லாத உணர்வை அடையும் SUSAN. தன் கணவனுக்கு கால் செய்கிறாள். ஆனால் இந்த சமயம் அவன் வேறு ஒரு பெண்ணுடன் இருப்பதை அறிந்த அவள் மனமுடைந்து போனை கட் செய்கிறாள். அதேசமயம் தன் மகளுக்கு கால் செய்ய, அவளும் SUSAN மனநிலையை உணராமல் போனை கட் செய்கிறாள்.
இப்படிப்பட்ட சூழலில் SUSAN தன் முன்னாள் கணவர் EDWARD வுடனான தன் வாழ்க்கையை நினைத்து பார்க்கிறாள். தற்போது SUSAN மற்றும் HUTTEN வாழ்க்கை, நாவல் மற்றும் SUSAN மற்றும் EDWARD வாழ்க்கை என மாறி மாறி காட்டப்படுகிறது. இப்படி கதைக்குள் கதை ஓட, கடைசியில் பணக்காரனை கட்டிகொண்டாள் வாழ்க்கை நன்றாக இருக்கும் என நினைக்கும் பெண்களுக்கு, இல்லற வாழ்க்கைக்கு பணம் தேவையில்லை, நல்ல மனம்தான் தேவை என முடிகிறது படம்..
இந்த கதைக்கும் மேலே உள்ள கதைக்கும் என்ன சம்பந்தம் என்ற கேள்வி உங்களுக்கு உண்டானால் தவறாமல் படத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்..

POSITIVE :

படத்தின் நீளம் பெரிதாக நமக்கு உணரவில்லை..
படம் ஆரம்பித்த சில நிமிடங்களில் வரும் விறுவிறுப்பான காட்சிகள் நம்மை படம் முழுக்க பார்க்க ஆர்வத்தை தூண்டுகிறது..

NEGATIVE :

கடைசியில் சொல்ல வரும் கருத்து நல்ல கருத்தாக இருந்தாலும், ரொம்ப பழசுதான்..

NOCTURNAL ANIMALS படம் சார்ந்த தகவல்கள் :

1993 ஆம் ஆண்டு TONY AND SUSAN என்ற பெயரில் வெளியான இந்த நாவலை, AUSTIN WRIGHT என்றவர் எழுதினார்.
2.25 கோடி டாலரில் உருவாக்கப்பட்ட இப்படம், 3.24 கோடி டாலர் வசூல் செய்தது.
DIRECTED BY TOM FORD
WRITING CREDITS
TOM FORD (SCREENPLAY)
AUSTIN WRIGHT (NOVEL)

AWARDS :

GRAND JURY PRIZE AWARD – TOM FORD – 2016
BSC AWARDS FOR BEST CINEMATOGRAPHY IN A THEATRICAL RELEASE – SEAMUS MCGARVEY – 2016
GOLDEN GLOBE AWARD FOR BEST SUPPORTING ACTOR – AARON TAYLOR JOHNSON – 2017
DAVID DI DONATELLO FOR BEST FOREIGN FILM – NOCTURNAL ANIMALS – 2017

CAST :

AMY ADAMS AS SUSAN MORROW
JAKE GYLLENHAAL AS TONY HASTINGS / EDWARD SHEFFIELD
MICHAEL SHANNON AS BOBBY ANDES
AARON TAYLOR JOHNSON AS RAY MARCUS
ISLA FISHER AS LAURA HASTINGS
ELLI BAMBER AS INDIA HASTINGS
ARMIE HAMMER AS HUTTON MORROW
KARL GLUSMAN AS LOU
ROBERT ARAMAYO AS TURK
LAURA LINNEY AS ANNE SUTTON
ANDREA RISEBOROUGH AS ALESSIA
MICHAEL SHEEN AS CARLOS

PRODUCED BY

TOM FORD
ROBERT SALERNO
MUSIC BY ABEL KORZENIOWSKI
CINEMATOGRAPHY BY SEAMUS MCGARVEY
FILM EDITING BY JOAN SOBEL
ART DIRECTION BY CHRISTOPHER BROWN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Follow us on Facebook Follow us on Twitter Subscribe us on Youtube