SHE IS THE MAN 2006 MOVIE TAMIL REVIEW | IS IT WORTH?

SHE IS THE MAN 2006 MOVIE TAMIL REVIEW

INITIAL RELEASE DATE : 8 MAR 2006

DIRECTOR : ANDY FICKMAN

GENRES : ROMANCE , COMEDY , SPORT

RUNNING TIME : 1H 45M

LANGUAGES : ENGLISH

AVAILABLE ON : AMAZON PRIME VIDEOS

சிவகார்த்திகேயனின் சினிமா வாழ்க்கையில் தவிர்க்க முடியாத படங்கள் பட்டியலில் REMO வுக்கு கண்டிப்பாக ஓர் இடம் உண்டு. அப்படி உருவான REMO 2016 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டதென்றால், HOLLYWOOD ல் 2006 ஆம் ஆண்டே இந்த கதைகளத்தில் ஒரு படம் எடுத்துள்ளனர். ஆனால் HOLLYWOOD படமான SHE’S THE MAN படத்திற்கும், REMO படத்திற்கும் எந்த சம்மந்தமும் இல்லை, கதையின் மையகருவை தவிர…

STARWOODSTAMIL RATING : 6.2

முக்கிய குறிப்பு : இப்படத்தில் பெரிதாக எந்த ஒரு A CONTENT காட்சிகளும் இடம்பெறவில்லை, இருந்தாலும் தாங்கள் ஒருமுறை இப்படத்தை பார்த்து குடும்பத்துடன் பாக்கலாமா?? வேண்டாமா?? என்று முடிவு செய்துகொள்ளவும்.

இப்படம் 1602 ஆம் ஆண்டு TWELFTH NIGHT என்ற தலைப்பில் வெளியான WILLIAM SHAKESPEARE நாவலை தழுவி எடுக்கப்பட்டதே.

21 JUMP STREET, X-MEN APOCALYPSE, SIDE EFFECTS போன்ற படங்களில் நடித்த CHANNING TATUM தான் இப்படத்தில் நாயகனாக நடித்துள்ளார்.

SHE IS THE MAN 2006 MOVIE TAMIL REVIEW (சுருக்கமான விமர்சனம்) :

இப்படத்தின் நாயகியான VIOLA ஒரு FOOTBALL PLAYER, தன் கல்லூரியில் நடக்க இருக்கும் கால்பந்து போட்டியில் இருந்து பெண்கள் அணி நிராகரிக்கப்பட, அதை எதிர்த்து தன் COACH யிடம் கேள்வி கேட்கிறார். ஆனால் COACH பாலினத்தை குறிப்பிட்டு சொல்லி, அதனால்தான் உங்கள் அணியை நிராகரித்தேன் என கூற, அதற்கு ஆதரவு தருவதுபோல் ஆண்கள் அணியின் CAPTAIN பேசுகிறான். VIOLA வும், ஆண்கள் அணியின் CAPTAIN னும் காதலித்து வரும் நிலையில், அவன் COATH க்கு ஆதராவாக பேசியதால் அவனுடனான காதலை முறித்துகொள்கிறாள் VIOLA. பின் பெண்கள் ஆண்களுக்கு நிகரான பலம் கொண்டவர்கள் என நிரூபிக்க, ஆண் வேடம் போட்டு வேறு ஒரு பள்ளியில் மாணவனாக சேர்ந்து, தன்னை நிராகரித்த அணியை வீழ்த்த நினைக்கிறார். இந்த பயணத்தில் ஆணாக வேடம் போட்ட VIOLA என்ன என்ன கஷ்டப்படுகிறார் என்பதை COMEDY யான திரைக்கதையில் பயணித்து நமக்கு விவரிக்கிறார் இயக்குனர் ANDY FICKMAN.

மேலும் படத்தை பற்றி தெரிந்துகொள்ள கீழே உள்ள விரிவான விமர்சனம் மற்றும் படம் சார்ந்த தகவல்களை படித்து தெரிந்துகொள்ளவும்.

SHE IS THE MAN 2006 MOVIE TAMIL REVIEW (விரிவான விமர்சனம்) :

தங்கள் அணியை போட்டியில் இருந்து நிராகரித்தது மட்டுமில்லாமல், அசிங்கபடுத்தியும் அனுப்ப, சோகமாக வீட்டுக்கு வருகிறாள் VIOLA. வீட்டில் VIOLA வின் அம்மா அவளின் சூழ்நிலை தெரியாமல் பேசியபடி இருக்க, தன் ரூமிற்கு செல்கிறாள் VIOLA. ஆனால் அங்கு அம்மாவிற்கு தெரியாமல் LONDON க்கு கிளம்புகிறான் VIOLA வின் அண்ணன். அதற்கு காரணம் அவன் குழு LONDON நடக்கும் கலை நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருப்பதே காரணம். அந்தசமயத்தில் “நம் கனவிற்காக எங்குவேணாலும் பயணிக்கலாம், எந்த முடிவுகளையும் எடுக்கலாம்” என சொல்லி கிளம்ப, VIOLA ஒரு முடிவை எடுக்கிறாள்.

தன் நண்பர்கள் உதவியுடன் தன்னை ஓர் ஆணாக வேடமிட்டு மாற்றிகொள்கிறாள். ஆனால் அவளுக்கு ஆண்களின் நடை மற்றும் பேசி வழக்கு பழக சில நாட்கள் எடுத்தாலும், எந்த ஒரு தயக்கமுன் இல்லாமல் தன் அண்ணனின் பள்ளிக்கு SEBASTIAN ஆக வேடமிட்டு சேர்கிறான்.

முதல் நாளே BOYS HOSTEL லில் காலெடுத்து வைக்கும் VIOLA வுக்கு, பல அதிர்ச்சிகள் காத்திருக்கிறது. எப்படி சமாளிக்க போகிறோம் என தெரியாமல் முழிபிதுங்க நிற்கிறாள். தன் அறையில் ஏற்கனவே மூன்று ஆண்கள் தங்கிருக்க, நான்காவதாக சேர்கிறாள் VIOLA.

தங்கள் அறையில் புதிதாக வந்த SEBASTIAN ஒரு பெண் என தெரியாமல் பழக தொடங்கிய DUKE மற்றும் நண்பர்கள். SEBASTIAN நடவடிக்கைகள் சரியில்லாமல் அவனிடமிருந்து விலகியே இருக்கின்றனர். ஆனால் அவர்களின் மனநிலையை தன் நண்பர்கள் உதவியோடு மாற்றுகிறாள் VIOLA.

அதன்பின் DUKE கால்பந்து அணியின் CAPTAIN என்பதால் அவனுடன் நெருங்கி பழக தொடங்கும் VIOLA. தான் SEBASTIAN என்பதை மறந்து அவனால் ஈர்க்கப்படுகிறாள். ஆனால் DUKE அதே பள்ளியில் படிக்கும் OLIVIA என்ற பெண்ணை நேசித்துவர, OLIVIA, SEBASTIAN யார் என தெரியாமல் அவனால் ஈர்க்கபடுகிறாள். கடைசியில் என்ன என்ன நிகழ்கிறது என்பதை பல நகைச்சுவைகளால் உள்ளடக்கி, தன் கதையை திரைக்கதையாக வடிவமைத்து இயக்கி இருக்கிறார் இயக்குனர் ANDY FICKMAN.

நல்ல ஒரு ROMANCE, COMEDY படம் பார்க்க நினைத்தால் கண்டிப்பாக இப்படம் உங்களை ஏமாற்றது. எங்கும் தேடாமல் AMAZON PRIME VIDEOS ல் கண்டு மகிழுங்கள்.

POSITIVE :

நகைச்சுவையை மையமாக வைத்து எழுதப்பட்ட திரைக்கதை.

VIOLA வாக நடித்த AMANDA BYNES ன் நடிப்பு பலம்.

NEGATIVE :

தமிழில் மொழிபெயர்க்காமல் இருப்பது.

சில LOGIC பார்க்காமல் இருப்பது நல்லது.

SHE’S THE MAN படம் சார்ந்த தகவல்கள் :

20 மில்லியன் டாலரில் உருவான இப்படம், 57 மில்லியனுக்கு மேல் வசூலித்தது.

இப்படம் WILLIAM SHAKESPEARE நாவலை தழுவி எடுக்கப்பட்டது.

DIRECTED BY ANDY FICKMAN
STORY BY EWAN LESLIE
SCREENPLAY BY
EWAN LESLIE
KAREN MCCULLAH
KIRSTEN SMITH
CATCH ME IF YOU CAN 2002 MOVIE TAMIL REVIEW
CATCH ME IF YOU CAN 2002 MOVIE TAMIL REVIEW
CAST :
AMANDA BYNES AS VIOLA
CHANNING TATUM AS DUKE
VINNIE JONES AS DINKLAGE
DAVID CROSS AS GOLD
LAURA RAMSEY AS OLIVIA LENNOX
JULIE HAGERTY AS DAPHNE
ROBERT HOFFMAN AS JUSTIN
ALEXANDRA BRECKENRIDGE AS MONIQUE
JAMES KRIK AS SEBASTIAN
NOCTURNAL ANIMALS 2016 MOVIE TAMIL REVIEW
NOCTURNAL ANIMALS 2016 MOVIE TAMIL REVIEW
MUSIC BY NATHAN WANG
CINEMATOGRAPHY BY GREG GARDINER
FILM EDITED BY MICHAEL JABLOW

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Follow us on Facebook Follow us on Twitter Subscribe us on Youtube