KNOCK KNOCK 2015 MOVIE TAMIL REVIEW | IS IT WATCHABLE?

KNOCK KNOCK 2015 MOVIE TAMIL REVIEW

INITIAL RELEASE DATE : 08 OCT 2015  
DIRECTOR : ELI ROTH
GENRES : THRILLER , HORROR
RUNNING TIME : 1H 39M
LANGUAGES : SPANISH , ENGLISH
AVAILABLE ON : AMAZON PRIME VIDEOS
JOHN WICK அனைத்து பாகங்களையும் பார்த்தவர்களுக்கு கண்டிப்பாக அந்த படத்தின் நாயகன் KEANU REEVES தெரியாமல் இருக்க வாய்ப்பு இல்லை. தன் காதலி பரிசாக கொடுத்த நாய் குட்டியை கொன்றதற்கு, அந்த நகரத்தில் உள்ள பல ரவுடிகளை கொன்று குவித்து தன் பலியை தீர்த்துகொள்வார். இப்படிப்பட்ட வெறிகொண்ட JOHN WICK நடித்த மற்றொரு படம் தான் KNOCK KNOCK.
முக்கிய குறிப்பு : இப்படத்தில் ஒரு சில நீண்ட ஆபாச காட்சிகள் இடம்பெற்றிருப்பதால், இப்படத்தை குடும்பத்துடன் பார்க்க இயலாது. மீறி பார்த்து வீட்டில் அசிங்கப்பட்டால் COMPANY பொறுப்பாகாது..
KNIVES OUT, BLADE RUNNER 2049, NO TIME TO DIE போன்ற படங்களில் நடித்த ANA DE ARMAS முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
பேய்ப்படம் போன்று சில காட்சிகள் இடம்பெற்றாலும், இது முழுக்க முழுக்க ஓர் THRILLER படமே.
KNOCK KNOCK 2015 MOVIE TAMIL REVIEW (சுருக்கமான விமர்சனம்) :
JOHN WICK ல் பலரை கொன்று குவித்த KEANU REEVES ஐ நம்பி இப்படத்தை பார்க்க வந்தால், பெரிய ஏமாற்றமே மிஞ்சும். ஏனென்றால் இப்படத்தில் இரண்டு பெண்களிடம் மாட்டிகொண்ட KEANU REEVES, எப்படி அவர்களிடம் இருந்து தப்பிக்கிறார் என்பதே முழுக்கதை. “என்னடா இது JOHN WICK க்கு வந்த சோதனை” என்பது போலவே இப்படம் பார்ப்பவர்களுக்கு தோன்றும் அளவு KEANU REEVES இப்படத்தில் கஷ்டப்படுவார். எதற்காக இரண்டு பெண்களிடம் KEANU REEVES மாட்டிகொள்கிறான்?? அவர்கள் அவனை என்ன செய்ய போகிறார்கள்?? கடைசியில் KEANU REEVES தப்பித்தானா இல்லையா?? என்பதை விறுவிறுப்பாக தன் திரைக்கதையின் மூலம் சொல்ல முயற்சி செய்திருக்கிறார் இயக்குனர் ELI ROTH.
மேலும் படத்தை பற்றி தெரிந்துகொள்ள கீழே உள்ள விரிவான விமர்சனம் மற்றும் படம் சார்ந்த தகவல்களை படித்து தெரிந்துக் கொள்ளவும்.
KNOCK KNOCK 2015 MOVIE TAMIL REVIEW (விரிவான விமர்சனம்) :
நாயகன் EVAN தன் மனைவி KAREN மற்றும் தன் குழந்தைகளான LISA, JAKE வுடன் அமைதியான சூழலில், மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறான். ஒருநாள் அவன் மனைவி மற்றும் குழந்தைகள் VACATION க்கு வெளியூர் செல்கின்றனர். ஆனால் தன் வேலை காரணமாக EVAN னால் அவர்களுடன் செல்ல முடியாமல் போகிறது.
தன் மனைவி மற்றும் குழந்தைகள் சென்ற பிறகு தன் வேலையை தொடங்கும் EVAN, இரவு கண்விழித்து வேலை பார்த்தபடி இருக்கின்றான். அந்த சமயம் மழை விடாமல் கொட்டி தீர்க்க, EVAN தனிமையில் தன் வேலையை செய்தபடி இருக்கின்றான். அப்போது EVAN வீட்டு “CALLING BELL” ஒலிக்கிறது.
யார் என பார்க்க வீட்டின் கதவை EVAN திறக்க, வெளியே மழையில் நனைந்து சொட்ட சொட்ட நிற்கின்றனர் இரண்டு பெண்கள். யார் அந்த பெண்கள் என தெரியாத EVAN னிடம் இருவரும் தங்களை அறிமுகப்படுத்தி கொள்கின்றனர். “நாங்கள் வழி தவறி இங்கு வந்துவிட்டோம், எங்களை அழைத்து வந்த TAXI யும் சென்றுவிட்டது. எங்கள் மொபைல் கூட வேலை செய்யவில்லை, உங்களால் உதவ முடியுமா??” என கேட்கின்றனர்.
நடு இரவில் இரண்டு பெண்கள் உதவி கேட்க, மறுக்க முடியாமல் உதவ முன்வருகிறான் EVAN. பின் தன் வீட்டுக்குள் அழைத்து, துவட்டிக்கொள்ள துண்டும் தருகிறான். அதேசமயம் அவர்கள் திரும்பி செல்ல TAXI ஒன்றை BOOK செய்ய, அந்த TAXI அங்கு வர 45 நிமிடங்கள் என MOBILE DISPLAY யில் தெரிகிறது.
இந்த இடைப்பட்ட நேரத்தில் EVAN னிடம் அந்த இரண்டு பெண்களும் அத்துமீறி நடக்க முயல்கின்றனர். ஆனால் அவர்களுக்கு இடம்கொடுக்காமல் EVAN தன் மனைவிக்கு உண்மையாக இருக்க உறுதியாக இருக்கின்றான்.
கடைசியில் EVAN அந்த பெண்களின் வலையில் சிக்கினானா?? அந்த பெண்கள் EVAN ஐ என்ன செய்ய காத்திருக்கிறார்கள்?? EVAN ஐ அந்த பெண்களிடம் இருந்து யார் காப்பாற்ற போகிறார்கள்?? படத்தின் கடைசியில் சொல்லும் மாபெரும் கருத்துதான் என்ன?? என பல கேள்விகளுக்கு தன் விறுவிறுப்பான திரைக்கதையில் பதில் சொல்ல முயற்சி செய்கிறார் இயக்குனர் ELI ROTH.
JOHN WICK ஐ மனதில் வைத்து பார்க்க வந்தால், மிகப் பெரிய ஏமாற்றத்தையே கொடுக்கும் இந்த படம். தவறிக்கூட குடும்பத்துடன் பார்த்துவிடாதீர்கள்..
POSITIVE :
யூகிக்க முடியாத முடிவு.
NEGATIVE :
யூகிக்க முடியாத முடிவாக இருந்தாலும், ரசிக்கும்படி இல்லை என்பதே உண்மை.
ஒன்றுமில்லாத கதையை, விறுவிறுப்பான திரைக்கதையில் சொல்ல முயற்சி செய்து தோல்வியையே தழுவுகிறது இப்படம்.
STARWOODSTAMIL RATING : 3.1
KNOCK KNOCK படம் சார்ந்த தகவல்கள் :
2 மில்லியன் டாலரில் உருவான இப்படம், 6 மில்லியனுக்கு மேல் வசூல் செய்தது.
2014 ஆம் ஆண்டு வெளியான JOHN WICK படத்தை அடுத்து, KEANU REEVES க்கு KNOCK KNOCK படம் வெளியானதால், இப்படத்திற்கு சில எதிர்ப்பார்ப்புகள் இருக்கத்தான் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
DIRECTED BY ELI ROTH
STORY BY ANTHONY OVERMAN , MICHAEL RONALD ROSS
SCREENPLAY BY
ELI ROTH
NICOLAS LOPEZ
GUILLERMO AMOEDO

 

CAST :
KEANU REEVES AS EVAN
LORENZA IZZO AS GENESIS
ANA DE ARMAS AS BELL
AARON BURNS AS LOUIS
IGNACIA ALLAMAND AS KAREN
THE SHAWSHANK REDEMPTION 1994 MOVIE TAMIL REVIEW
THE SHAWSHANK REDEMPTION 1994 MOVIE TAMIL REVIEW
MUSIC BY MANUEL RIVEIRO
CINEMATOGRAPHY BY ANTONIO QUERCIA
FILM EDITING BY DIEGO MACHO GOMEZ.
MONTAGE 2013 KOREA MOVIE TAMIL REVIEW
MONTAGE 2013 KOREA MOVIE TAMIL REVIEW

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Follow us on Facebook Follow us on Twitter Subscribe us on Youtube