US 2019 MOVIE TAMIL REVIEW | WORTH OR NOT?

US 2019 MOVIE TAMIL REVIEW

RELEASED DATE : 29 MARCH 2019 (INDIA)
DIRECTOR : JORDAN PEELE
GENRES : HORROR , THRILLER
RUNNING TIME : 2H 1M
LANGUAGES : ENGLISH
AVAILABLE ON : YOUTUBE
வித்தியாசமான கதைகளம் கொண்ட ஹாலிவுட் படங்களை தேடி, தேடி பார்ப்பவரா நீங்கள்?? அப்படி என்றால் US 2019 MOVIE TAMIL REVIEW உங்களுக்கானது தான்..
முக்கிய குறிப்பு (POSITIVE SIDE) : இப்படத்தில் பெரிதாக A CONTENT இல்லை என்பதே உண்மை.
இப்படம் சற்று பேய் படம் போல் இருந்தாலும், பேய் படம் அல்ல. இப்படம் முழுக்க முழுக்க ஒரு THRILLER படமே ஆகும். ஆகையால் பேய் பயம் வேண்டாம்.
இப்படத்தை தன் சொந்த தயாரிப்பு நிறுவனமான monkeypaw productions company பெயரிலையே தயாரித்திருக்கிறார் இயக்குனர் jordan peele. 2 கோடி டாலரில் எடுக்கப்பட்ட இப்படம் 25.52 கோடி டாலர் வசூல் செய்து மாபெரும் வெற்றி அடைந்திருக்கிறது.

STARWOODSTAMIL RATING : 6.0

US 2019 MOVIE TAMIL REVIEW (சுருக்கமான விமர்சனம்) :
இப்படத்தில் வரும் கதாநாயகியான ADELAIDE WILSON, தன் குடும்பத்துடன் விடுமுறையை கொண்டாட SANTA CRUZ என்ற கடற்கரைக்கு செல்கின்றாள். ஆனால் அதே இடத்திற்கு அவள் தன் பெற்றோரோடு சிறுவயதில் வந்திருக்கிறாள். அப்போது அவளுக்கு சில மர்மமான சம்பவங்கள் நடந்துள்ளது. ஆகையால் அவ்விடத்திற்கு தன் கணவரின் கட்டாயத்தால் விடுமுறையை அறை மனதோடு கொண்டாட வந்திருக்கும் ADELAIDE WILSONனிற்கு ஒவ்வொரு நொடியும் பயம் தான்..
இப்படி நொடிக்கு நொடி பயப்படும் ADELAIDE WILSON அன்றிரவு SANTA CRUZ BEACH ள் உள்ள GUEST HOUSE ள் தன் குடும்பத்துடன் தங்குகின்றாள். ஆனால் அன்றிரவு அவர்கள் சந்திக்கும் மர்மமான சம்பவங்களே முழு கதை..
கதையின் சுவாரசியம் கெடாமல் இருக்கவே இந்த மிக சுருக்கமான விமர்சனம். மேலும் இப்படத்தை பற்றி தெரிந்துக்கொள்ள கிழே வரும் விரிவான விமர்சனத்தை படிக்கவும். இன்னும் இதுபோன்ற பல சுவாரஸ்யமான படத்தின் விமர்சனம் அறிய, எங்கள் Movie review category உள்ளே சென்று பார்க்கவும்.
US 2019 MOVIE TAMIL REVIEW (விரிவான விமர்சனம்) :
இப்படத்தின் நாயகியான ADELAIDE WILSON சிறு வயதில் தன் குடும்பத்துடன் SANTA CRUZ என்ற கடற்கரைக்கு செல்கிறாள். அங்கு பல பொழுதுபோக்கு சம்பந்தமான விசயங்கள் இருக்கின்றது. ஆகையால் அங்கு மக்கள் கூட்டம் வெகுவாக உள்ளது. அப்படி இருக்கையில் ADELAIDE WILSON தந்தை மற்றும் அம்மா ஒரு விளையாட்டில் மும்முரமாக தங்கள் கவனத்தை செலுத்துகின்றனர். அந்த சமயம் ADELAIDE WILSON அவர்களை விட்டு விலகி கடற்கரையை நோக்கி செல்கிறாள். அங்கு ஒரு “FIND YOURSELF” என்ற ஒரு பொழுதுபோக்கு இடம் உள்ளது. அதை அவள் பார்க்கும் சமயத்தில் மழை வர, அவள் அந்த இடத்தின் உள்ளே செல்கிறாள். உள்ளே சென்ற அவள் அந்த இடத்தை சுற்றி பார்க்கிறாள். உள்ளே செல்ல, செல்ல ஒரு சமயத்தில் முழுவதும் கண்ணாடியால் சூழப்பட்ட ஒரு இடத்தில் மாட்டிக்கொள்கிறாள். EXIT தெரியும் இடமெல்லாம் செல்லும் அவளுக்கு வெறும் கண்ணாடி தான் இருக்கிறது. என்ன செய்வது என்று அறியாத நிலையில் ஒரு கண்ணாடியில் அவள் பிம்பம் தெரிகிறது எந்த அசைவும் இல்லாமல். ஆனால் மறுபுறம் அவள் அசைந்த வண்ணம்தான் இருக்கிறாள். திரும்பி அந்த கண்ணாடியை அவள் பார்க்க, சற்று நேரம் கழித்து அந்த பிம்பம் திரும்பி பார்க்கிறது. ஒரே மிரட்சியுடன் காணப்படுகிறது ADELAIDE WILSON னின் முகம்.
அந்த இடத்திற்கு சென்று வந்ததில் இருந்து அவள் சரியில்லை என அவள் பெற்றோர் பேசியபடி இருக்கின்றனர். அதை கவனித்தவாறே தன் அறையில் இருக்கிறாள் ADELAIDE WILSON. சில வருடங்கள் கழித்து..
ADELAIDE WILSON தன் கணவர் மற்றும் பிள்ளைகளான ZORA (மகள்) மற்றும் JASON-னுடன் (மகன்) SANTA CRUZ கடற்கரைக்கு வருகிறாள். ஆனால் இந்தமுறை அவளுக்கு அங்கு வருவதற்கு சற்றும் விருப்பமில்லை. ஆனால் GABE (ADELAIDE WILSON’S HUSBAND) தன் நண்பரான KITTY TYLER மற்றும் JOSH TYLER ஐ IMPRESS செய்ய இந்த SANTA CRUZ கடற்கரைக்கு அழைத்து வருகிறான்.
கடற்கரையில் ADELAIDE WILSON மற்றும் JOSH ஒரு இடத்தில் அமைதியாக பேசியபடி இருக்கின்றனர். ஆனால் JASON அந்த சமயம் வேறு எங்கோ நடந்து செல்கிறான். அதை கவனிக்காமல் ADELAIDE WILSON, JOSH உடன் பேசிக்கொண்டு இருக்கிறாள். ஒரு இடத்தில் ஒருவன் இரத்தம் கைகளில் சொட்ட சொட்ட நின்றுக் கொண்டு இருக்கிறான். அதை கவனித்த JASON அவனை நோக்கி செல்கிறான். அதேசமயம் JASON அங்கு இல்லாததை கவனிக்கும் ADELAIDE WILSON பதருகிறாள். அங்கும் இங்கும் ஓடி அவனை தேடியபடி அவள் இருக்க, JASON அமைதியாக அங்கு வருகிறான். அவனை பார்த்த ADELAIDE WILSON, அவனை நோக்கி ஓடுகிறாள். அப்படி என்ன தான் நடந்தது ADELAIDE WILSON க்கு சிறுவயதில் SANTA CRUZ BEACH ல் என்ற கேள்வி படத்தை பார்க்கும் அனைவருக்கு எழும்பும்.
அன்றிரவு SANTA CRUZ BEACH GUEST HOUSE ல் தங்குகின்றனர் ADELAIDE WILSON குடும்பம். அப்போது தான் சிறுவயதில் இங்கு வந்ததாக GABE யிடம் சொல்கிறாள் ADELAIDE WILSON. அப்போது தன்னை போலவே ஒரு மர்மமான சிறுமியை அவள் பார்த்ததாக சொல்கிறாள். அதை கேட்ட GABE சற்று குழப்பம் அடைகிறான். அதாவது ADELAIDE WILSON னிற்கு என்ன ஆனது என்பதுபோல் தான் அந்த குழப்பமே அவனுக்கு. இருந்தாலும் அவளுக்கு ஆறுதல் சொல்கிறான் GABE.
இப்படி இவர்கள் பேசும் சமயத்தில் ZORA அங்கு வந்து யாரோ வீட்டிற்கு வெளியே நிற்பதாக சொல்கிறாள். அதை கேட்டு ADELAIDE WILSON மற்றும் GABE கதவின் அருகே சென்று பார்க்கின்றனர். அப்போது வீட்டிற்கு வெளியே சற்று தூரத்தில் நான்கு பேர் நிற்கின்றனர். இதை பார்த்த ADELAIDE WILSON மிரண்டு போகிறாள். GABE “தான் போய் யார் அவர்கள் என பார்த்து வருவதாக” கூறி வெளியே செல்கிறான்.
அவர்கள் சற்றும் அசையாமல் இருட்டாக உள்ள இடத்தில் நிற்கின்றனர். அவர்களிடம் “நீங்கள் யார், இங்கிருந்து கிளம்புங்கள்” என கூறுகிறான் GABE. ஆனால் அவர்கள் சற்றும் நகரவில்லை, பயத்தில் 911 க்கு CALL செய்கிறாள் ADELAIDE WILSON. அவர்கள் 15 நிமிடத்தில் அவர்கள் இருக்கும் இடத்திற்கு வருவதாக கூறுகின்றனர். வெளியே நின்ற நான்கு பேரும் திடிரென பிரிந்து செல்கின்றனர். அதில் ஒருவன் GABE ஐ நோக்கி நடந்து வருகிறான். அதை பார்த்து பயந்த GABE வீட்டின் உள்ளே சென்று பூட்டிக்கொள்ள முயல்கிறான். ஆனால் GABE ஐ அடித்து உள்ளே நுழைந்த அவன் காண்பதற்கு GABE போலவே இருக்கிறான். பிரிந்து சென்ற அனைவரும் வேறு வேறு வழிகளில் வீட்டின் உள்ளே வந்துவிடுகின்றனர். அப்போதுதான் தெரிகிறது நான்கு பேரும் அச்சு அசலாக இவர்களை போலவே இருக்கின்றனர். பயத்தின் உச்சியில் இருக்கும் ADELAIDE WILSON க்கு என்ன செய்வது என தெரியாமல் இருக்கிறாள்.
அப்போது அவள் உருவத்தில் உள்ள RED பேச தொடங்குகிறாள். நாங்கள் அனைவரும் உங்கள் நிழல்கள். நீங்கள் விரும்பி வாழும் வாழ்க்கையை, நாங்கள் விரும்பவில்லை என்றாலும் கட்டாயத்தின் பேரில் வாழ்ந்து கஷ்டப்படுகிறோம். ஆனால் இனி நாங்கள் எங்கள் வாழ்க்கையை வாழ முடிவு செய்து உள்ளோம் என கூறி அவர்களை கொலை செய்ய முடிவு செய்கிறது. அதேபோல் SANTA CRUZ BEACH க்கு வந்த அனைவரின் நிழல்களும், தங்களுக்கு உடமை பட்டவர்களை கொலை செய்ய தொடங்குகின்றன. இப்படிபட்ட இக்கட்டான சூழலில் ADELAIDE WILSON குடும்பம் எப்படி தப்பிக்க போகிறார்கள்?? இப்படி நிழல்கள் கொலை செய்ய காரணம் என்ன?? கடைசியில் உள்ள TWIST என்ன?? என்ற பல கேள்விகளுக்கு சற்று பொறுமையாக பதில் சொல்கிறார் இயக்குனர் JORDAN PEELE.
முக்கிய குறிப்பு (NEGATIVE SIDE) : படத்தின் நீளம் சற்று படத்தின் மீது உள்ள ஆர்வத்தை சோதித்து பார்க்கிறது. முடிவில் வரும் திருப்பங்கள் வேற LEVEL என்றே சொல்ல வைத்தாலும், அதற்காக இவ்வளவு நீளமான திரைக்கதை தேவையா?? என்ற கேள்வியையும் எழுப்புகிறது.
AWARDS
NEW YORK FILM CRITICS CIRCLE AWARD FOR BEST ACTRESS 2019 – LUPITA NYONG’O
BANDUNG FILM FESTIVAL FOR IMPORTED FILM 2019 – US – JORDAN PEELE
‘NAACP IMAGE AWARD FOR OUTSTANDING ACTRESS IN A MOTION PICTURE 2020 – LUPITA NYONG’O
NAACP IMAGE AWARD FOR OUTSTANDING WRITING IN A MOTION PICTURE 2020 – JORDAN PEELE
CRITICS’ CHOICE MOVIE AWARD FOR BEST SCI-FI / HORROR MOVIE 2020 – US – JORDAN PEELE

 

CAST
LUPITA NYONG’O AS ADELAIDE WILSON / RED
WINSTON DUKE AS GABE WILSON / ABRAHAM
ELISABETH MOSS AS KITTY TYLER / DAHLIA
TIM HEIDECKER AS JOSH TYLER / TEX
SHAHADI WRIGHT JOSEPH AS ZORA WILSON / UMBRAE
EVAN ALEX AS JASON WILSON / PLUTO
YAHYA ABDUL – MATEEN II AS RUSSEL THOMAS / EARTHA
CALI SHELDON AS LINDSEY TYLER / IO
NOELLE SHELDON AS LINDSEY TYLER / NIX
MADISON CURRY AS YOUNG ADELAIDE WILSON / YOUNG RED
ASHLEY MCKOY AS TEENAGE ADELAIDE WILSON / TEENAGE RED
NAPIERA GROVES AS DR. FOSTER
LON GOWAN AS DON
ALAN FRAZIER AS FERDIE / JEREMIAH
DUKE NICHOLSON AS DANNY / TONY
DUSTIN YBARRA AS TROY / BRAND
NATHAN HARRINGTON AS GLEN / JACK
KARA HAYWARD AS NANCY / SYD

 

DIRCTION & WRITING BY JORDAN PEELE
PRODUCTION COMPANY “MONKEYPAW PRODUCTIONS”
MUSIC BY MICHAEL ABELS
CINEMATOGRAPHY BY MIKE GIOULAKIS
FILM EDITING BY NICHOLAS MONSOUR
CASTING BY TERRI TAYLOR
PRODUCTION DESIGN BY RUTH DE JONG
ART DIRECTION BY CARA BROWER
SET DECORATION BY FLORENCIA MARTIN
COSTUME DESIGN BY KYM BARRETT

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Follow us on Facebook Follow us on Twitter Subscribe us on Youtube