ANDHADHUN 2018 TAMIL REVIEW | IS WORTH TO WATCH?

ANDHADHUN 2018 TAMIL REVIEW

RELEASED DATE : 05 OCT 2018

DIRECTOR : SRIRAM RAGHAVAN

GENRES : COMEDY, THRILLER

RUNNING TIME : 2H 30M

LANGUAGES : HINDI

AVAILABLE ON : YOUTUBE, JIO CINEMAS

தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் உலக சினிமா என பல மொழிகளில் THRILLER படங்களை தேடி தேடி பார்ப்பவர்களா நீங்கள். அப்ப இந்த REVIEW உங்களுக்குதான்.

ANDHADHUN 2018 TAMIL REVIEW  (சுருக்கமான விமர்சனம்) :

ஆகாஷ் என்னும் கண் தெரியாத PIANO PLAYER எப்படியாவது LONDON போக வேண்டுமென துடிக்கும் ஓர் இளைஞர். ஆனால் ஒருநாள் எதிர்ப்பாராமல் உருவான நட்பால் அவருக்கு வேலை கிடைக்கிறது. அந்த வேலையின் மூலமாக தனக்கு தேவையான பணத்தை சம்பாதிக்க தொடங்கும் ஆகாஷ்க்கு, அந்த எதிர்ப்பாராத நட்பு காலப்போக்கில் காதலாக மாறும் சமயத்தில், திடீரென ஆகாஷ் ஒரு கொலையை நேரில் பார்க்க நேரிடுகிறது. அதன் பின் அந்த கொலை அவன் வாழ்க்கையை எப்படி புரட்டி போடுகிறது?? அதில் இருந்து தொடரும் பல பிரச்சனைகளை எப்படி அவன் எதிர்க்கொள்கிறான்?? அவன் ஆசைப்பட்டது போல் LONDON சென்றானா?? இல்லையா?? என்ற பல கேள்விகளுக்கு தனது விறுவிறுப்பான திரைக்கதையில் பதிலளிக்கிறார் இயக்குனர் ஸ்ரீராம் ராகவன்.

STARWOODS RATING : 8.5 / 10

ANDHADHUN 2018 TAMIL REVIEW (விரிவான விமர்சனம்) :

படத்தின் தொடக்கத்தில் ஒரு முயல் வயலில் விளைந்துள்ள காய்கறியை கொறித்துக்கொண்டு இருக்கிறது. மற்றொருபுறம் அந்த வயலுக்கு சொந்தக்காரன் அந்த முயலை குறிவைத்தப்படி துப்பாக்கியுடன் நிற்கிறான். அந்த முயலுக்கு ஒரு கண் தெரியாததால் அது அவனை சரியாக கவனிக்காமல் கொறித்துக்கொண்டு நிற்கிறது. திடீரென அவனை பார்த்த அந்த முயல் வேகமாக ஓட துவங்குகிறது. அதை தட்டு தடுமாறி துரத்துகிறார் விவசாயி. தெறித்து ஓடிய அந்த முயல் ஓர் மயில் கல் அருகில் போய் நிற்கிறது. விவசாயி அதை குறிவைக்கிறார். கண் இமைக்கும் நேரத்தில் அவர் அந்த முயலை சுடுகிறார். BACKGROUND ல் ஒரு கார் ACCIDENT ஆகும் சத்தம் மட்டும் கேட்கிறது. சிவப்பு நிறத்தில் திரையில் தெரிவது ANDHADHUN என்கிற படத்தின் TITLE மட்டுமே.
அடுத்த காட்சியில் கண்கள் தெரியாத நாயகன் ஆகாஷ் PIANO வாசித்துக்கொண்டு இருக்கிறார். அவர் PIANO மீது நடந்தபடி அவர் வளர்க்கும் பூனை ராணி உலாவுகிறது.
அடுத்த காட்சியே பிரமோத் என்கிற ஒரு பிரபல பழைய நடிகரின் வீட்டை காட்டுகிறார்கள். பிரமோத்தும் அவரது இரண்டாவது மனைவியும் அந்த வீட்டில் வாழ்ந்து வருகின்றனர். ஏனென்றால் பிரமோத் முதல் மனைவியின் இறப்பே அதற்கு காரணம், இருந்தாலும் முதல் மனைவிக்கு  பிறந்த மகள் வெளிநாட்டில் வளர்ந்து வருகிறாள்.
பிரமோத் தன் மகளுடன் வீடியோ கால் பேசிக்கொண்டே சிமியிடம் வருகிறார். பின் சிமி மற்றும் பிரமோத் மகள் தானி வீடியோ காலில் பேசும்போது, தானி சிமியை அத்தை என அழைக்கிறாள். அதற்கு காரணம் தானியின் வயது தான். ஆமாம் பிரமோத் ஓர் 70 வயதுக்கொண்டவராக இருந்தாலும், 35 வயதுக்கொண்ட ஓர் நடுத்தர வயது பெண்ணாக சிமி இருப்பதால் தான் தானி சிமியை அப்படி அழைக்க தூண்டுகிறது.
ஒருநாள் ஆகாஷ் ரோட்டில் நடந்து வரும்போது எதிர்ப்பாராமல் வண்டியில் வந்த நாயகி சோபி ஆகாஷ் மீது மோதுகிறாள். பின் அவன் கண் தெரியாதவன் என தெரிய, அவனை அழைத்துக்கொண்டு COFFEE SHOP செல்கிறாள். அப்போதுதான் அவளுக்கு ஆகாஷ் PIANO PLAYER என தெரிய வருகிறது. அதன்பின் அவனை தன் RESTAURENT க்கு அழைத்து செல்கிறாள் சோபி. அந்த சமயத்தில் ஆகாசிடம் அவனுக்கு எப்படி கண் தெரியாமல் போனது என கேட்கிறாள். அதற்கு ஆகாஷ் சிறு வயதில் விளையாடும்போது பின் தலையில் BALL அடித்ததால் தனக்கு கண் தெரியாமல் போனது என கூறுகிறான். மேலும் அதைப்பற்றி சோபி கேட்க, ஆகாஷ் அதை பற்றி பேச விரும்பவில்லை என கூறிவிடுகிறான்.சோபி தனது RESTAURENT ல் உள்ள PIANO வை ஆகாஷ் வாசிக்க வைக்கிறாள். அதை கேட்டு மயங்கிய சோபி அப்பா தினமும் ஐந்து மணிக்கு தங்கள் RESTAURENT ல் ஆகாஷை வாசிக்க சொல்கிறார். பின் தினமும் அங்கு PIANO வாசிக்கும் ஆகாஷ்க்கு அங்கு வருவர்களிடம் இருந்து வாழ்த்து குவிகிறது. அதில் ஒருவர் நடிகர் பிரமோத்.இப்படி அன்றாட PIANO வாசிக்கும் ஆகாஷ் தனக்கு கண் தெரியாதது போல் நடிப்பது AUDIANCE க்கு மட்டுமே தெரிய வருகிறது. அதேபோல் ஆகாஷ் வீட்டுக்கு கீழே இருக்கும் சிறுவன் மட்டும் தொடர்ந்து ஆகாஷை சந்தேகப்பட்டு வருகிறான். ஆனால் அவனாலும் அதை கண்டு பிடிக்க முடியவில்லை.
இப்படி அனைவரையும் ஏமாற்றும் ஆகாஷிடம் ஒருநாள் பிரமோத் PRIVATE ஆக தன் கல்யாண நாளன்று தன் வீட்டில் PIANO வாசிக்க கேட்கிறார். அதற்கு சம்மதித்த ஆகாஷ்க்கு பிரமோத் ADVANCE ஆக பணம் கொடுக்கிறார். ஆனால் கல்யாண நாளன்று ஒருவேளையாக பிரமோத் வெளியூர் செல்ல வேண்டிய சூழல் வருகிறது. ஆனால் அது பிரமோத் மனைவி சிமிக்கு பெரிய ஏமாற்றத்தை அளிக்கிறது.
இதை பற்றி எதுவும் தெரியாமல் பிரமோத் கல்யாண நாளன்று அவர் வீட்டிற்கு வருகின்ற ஆகாஷ், பிரமோத் வீட்டு CALLING BELL ஐ அடிக்கிறான். அந்தசமயம் கதவை சிமி திறக்க, அதேசமயம் எதிர் வீட்டில் உள்ள MRS. D’SA வும் கதவை திறந்து பார்க்கிறார். ஆகாஷ் பிரமோத் தன்னை வர சொன்னதாக சொல்கிறான். ஆனால் சிமி பிரமோத் வெளியூர் சென்றிருப்பதாக சொல்கிறார். இருந்தாலும் ஆகாஷ் அவர்கள் கல்யாண தினத்தன்று தன்னை PIANO வாசிக்க கூப்பிட்டதாக சிமியிடம் கூறுகிறான். வேறு வழியில்லாமல் உள்ளே அழைத்து சென்று PIANO வாசிக்க சொல்கிறாள் சிமி. PIANO வாசிக்க தொடங்கும் ஆகாஷ் அங்கு பார்ப்பது பிரமோத் சடலத்தை.
சிமி ஆகாஷ்க்கு கண்கள் தெரியாததை பற்றி கேட்கிறாள். ஆகாஷ் தனக்கு எப்படி கண் தெரியாமல் போனது என்பதை அவளிடம் சொல்கிறான். பின் சிமியிடம் TOILET போக வேண்டுமென கூறுகிறான். சிமி அவனை TOILET க்கு அழைத்து சென்று விடுகிறாள். அங்கு TOILET ல் ஒருவன் GUN கையில் வைத்தபடி நிற்கிறான். என்ன செய்வது என தெரியாமல் அங்கிருத்து சாமர்த்தியமாக தப்பிக்கிறான் ஆகாஷ்.
அங்கிருந்து தப்பித்து வந்த ஆகாஷ் நேராக போலீஸ் ஸ்டேஷன் போகிறான். அங்கு நடந்த கொலையை பற்றி சொல்ல தொடங்கும் நேரத்தில், உள்ளே இருந்து ஆகாஷை பார்த்தபடி வெளியே வருகிறான் சிமி வீட்டில் GUN வைத்திருந்த கொலையாளி. அவன் ஆகாஷ் வந்த ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் என தெரிந்த உடன் அங்கிருந்தும் சாமர்த்தியமாக தப்பிக்கிறான் ஆகாஷ்.
தான் பார்த்த கொலையை சொல்ல முடியாமல் தவிக்கும் ஆகாஷ் ஒருபுறம் இருக்க, மறுபுறம் அந்த கொலைக்கு சாட்சியாகிறாள் சிமி வீட்டுக்கு எதிரில் உள்ள MRS. D’SA. அதேசமயம் ஆகாஷிடம் தனக்கு PIANO சொல்லிதர சொல்லி கேட்கிறாள் பிரமோத் மகள். அதற்கும் சம்மதம் சொல்கிறான் ஆகாஷ்.
ஒருநாள் சிமி எதிர் வீட்டு D’SA விடம் தலை வலிக்கிறது என கூறி உதவிக்கேட்கிறாள். அதேசமயம் தானிக்கு PIANO வாசிக்க சொல்லித்தர வருகிறான் ஆகாஷ். D’SA வாயை திறந்தாள் தான் மாட்டிக்கொள்ள வாய்ப்பு இருக்கிறது என உணர்ந்து அவளை மாடியில் இருந்து தள்ளிவிடுகிறாள் சிமி, அதேசமயம் அங்கு வந்த ஆகாஷ் அந்த கொலையையும் பார்க்க நேரிடுகிறது.
தனது இரு கொலைகளை பார்த்த ஆகாஷ் உண்மையிலே கண்கள் தெரியாதவனா?? என சந்தேகம் வந்த சிமி ஆகாஷ் வீட்டிற்கு வருகிறாள். கதவை திறந்த ஆகாஷ்க்கு சிமி வந்திருப்பது அதிர்ச்சி, ஆனால் சிமி சாதாரணமாக வந்ததாக சொல்லி அவனுக்கு SWEET தருகிறாள். அதை சாப்பிட்டபடி COFFEE குடிக்கிறீர்களா என கேட்கிறான். சரியென சொல்லி அவனை பல விதங்களில் ஆய்வு செய்கிறாள் சிமி. இருந்தாலும் அவைகளை சமாளிக்கிறான் ஆகாஷ். பின் கடைசியாக அவன் COFFEE யில் விசத்தை கலக்கிறாள் சிமி. ஆனால் அதை பார்த்தும் என்ன செய்வது என புரியாமல் இருக்கும் ஆகாஷ், அந்த COFFEE CUP ஐ எதிர்ப்பாராமல் தட்டி விடுவதுபோல் நடிக்கிறான். அதை கண்டுபிடிக்கிறாள் சிமி. பின் தன் கையில் உள்ள GUN ஆல் அவனை மிரட்டி உண்மைகளை தெரிந்துக்கொள்கிறாள். அதே சமயம் ஆகாஷ் தன் தொண்டையை பிடித்துக்கொண்டு தடுமாற தொடங்குகிறான். சிமி அதை பார்த்தப்படி அமைதியாக நிற்கிறாள். ஒன்று செய்ய முடியாமல் தரையில் விழும் ஆகாஷ் உடலில் எந்த ஒரு அசைவும் இல்லை.. அந்த சமயத்தில் இடைவேளை வருகிறது. அதன் பின் என்ன நடக்கிறது என்பதை படம் பார்த்து தெரிந்துக்கொள்ளவும்.

CAST :

AYUSHMANN KHURRANA AS AKASH,
TABU AS SIMI,
RADHIKA APTE AS SOPHIE,
ANIL DHAWAN AS PRAMOD SINHA,
MANAV VIJ AS INSPECTOR MANOHAR JAWANDA,
ASHWINI KALSEKAR AS RASIKA JAWANDA,
ZAKIR HUSSAIN AS DR. SWAMI,
CHHAYA KADAM AS SAKHU,
RASHMI AGDEKAR AS DAANI,
ABHISHEK SHUKLA AS ANIMAL HUNTER,
GOPAL K. SINGH AS SUB INSPECTOR PARESH,
KABIR SHAIKH AS BANDU
MOHINI KEWALRAMANI AS MRS. D’SA
MUSIC : DANIEL B. GEORGE, GIRISH NAKOD, RAFTAAR, AMIT TRIVEDI
CINEMATOGRAPHY : K. U. MOHANAN
EDITOR : POOJA LADHA SURTI

AWARDS :

SCREEN AWARD FOR BEST DIRECTOR – SRIRAM RAGHAVAN – WON
SCREEN AWARD FOR BEST STORY – SRIRAM RAGHAVAN, ARIJIT BISWAS – WON
SCREEN AWARD FOR BEST SOUND DESIGN – MADHU APSARA – WON
SCREEN AWARD FOR BEST EDITING – POOJA LADHA SURTI – WON
ZEE CINE AWARD FOR BEST PERFORMANCE IN NEGATIVE ROLE – TABU
ZEE CINE AWARD FOR BEST ACTOR (VIWER’S CHOICE) – AYUSHMANN KHURRANA – WON
ZEE CINE AWARD FOR BEST EDITING – POOJA LADHA SURTI – WON
ZEE CINE AWARD FOR BEST FILM WRITING – SRIRAM RAGHAVAN, ARIJIT BISWAS, POOJA LADHA SURTI, YOGESH CHANDEKAR, HEMANTH M RAO – WON
ZEE CINE AWARD FOR BEST BACKGROUND SCORE – DANIEL B. GEORGE – WON
FILMFARE AWARD FOR BEST FILM – ANDHADHUN – NOMINATED
FILMFARE AWARD FOR BEST FILM (CRITICS) – ANDHADHUN – WON
FILMFARE AWARD FOR BEST DIRECTOR – SRIRAM RAGHAVAN – NOMINATED
FILMFARE AWARD FOR BEST ACTOR – AYUSHMANN KHURRANA – NOMINATED
FILMFARE AWARD FOR BEST ACTOR (CRITICS) – AYUSHMANN KHURRANA – WON
FILMFARE AWARD FOR BEST ACTRESS – TABU – NOMINATED
FILMFARE AWARD FOR BEST ACTRESS (CRITICS) – TABU – NOMINATED
FILMFARE AWARD FOR BEST EDITING – POOJA LADHA SURTI – WON
FILMFARE AWARD FOR BEST SCREENPLAY – SRIRAM RAGHAVAN, ARIJIT BISWAS, POOJA LADHA SURTI, YOGESH CHANDEKAR, HEMANTH M RAO – WON
FILMFARE AWARD FOR BEST SOUND DESIGN – MADHU APSARA – NOMINATED
FILMFARE AWARD FOR BEST BACKGROUND SCORE – DANIEL B. GEORGE – WON
NATIONAL FILM AWARD FOR BEST ACTOR – AYUSHMANN KHURRANA – WON
NATIONAL FILM AWARD FOR BEST FEATURE FILM IN HINDI – ANDHADHUN
NATIONAL FILM AWARD FOR BEST SCREENPLAY – ANDHADHUN – WON
INTERNATIONAL INDIAN FILM ACADEMY AWARD FOR BEST STORY – ANDHADHUN – WON
INTERNATIONAL INDIAN FILM ACADEMY AWARD FOR BEST DIRECTOR – SRIRAM RAGHAVAN – WON
INTERNATIONAL INDIAN FILM ACADEMY AWARD FOR BEST ACTOR – AYUSHMANN KHURRANA – NOMINATED
INTERNATIONAL INDIAN FILM ACADEMY AWARD FOR BEST ACTRESS – TABU – NOMINATED
INTERNATIONAL INDIAN FILM ACADEMY AWARD FOR BEST SUPPORTING ACTRESS – RADHIKA APTE – NOMINATED
BANDUNG FILM FESTIVAL AWARD FOR HONORABLE IMPORTED FILM – ANDHADHUN – WON
AACTA AWARD FOR BEST ASIAN FILM – ANDHADHUN – NOMINATED

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *